இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடத்துக்கு மாற்றல் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்.

ரிஷபம்: வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் மனநிம்மதி கிட்டும். பால்ய நண்பர்கள் உங்களை தேடி வருவார்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

மிதுனம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து செயல்படுவர். அலுவலகத்தில் வீண் விவாதம் வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.

கடகம்: தம்பதிக்குள் கருத்துமோதல் இருக்கும். திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் ஓரளவு பணம் வரும். அலுவலத்தில் பணிச்சுமை கூடும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

சிம்மம்: உறவினர்களின் அன்புத் தொல்லைகள் உண்டு. சிக்கனமாக இருந்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் ஆலோசனைப்படி நடக்கவும்.

கன்னி: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். தங்கம், வெள்ளி ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் லாபம் தரும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்.

துலாம்: எதிர்பாராத பணவரவால் பழைய கடனை பைசல் செய்வீர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் வெற்றி காண முயற்சி மேற்கொள்வீர்.

விருச்சிகம்: கலைப் பொருட்கள் வாங்குவீர். சகோதர வகையில் இருந்த அலைச்சல் விலகும். அலுவலகத்தில் வீண் விவாதம் தவிர்ப்பீர். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். பங்குதாரர்கள் முழு ஆதரவு தருவார்கள்.

தனுசு: குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வர். வாகனத்தை சீர் செய்வீர். பிள்ளைகளிடம் இருந்து வந்த பிடிவாதம் மறையும். வியாபாரத்தில் போட்டி குறையும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

மகரம்: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். அரசு வேலை முடிவுக்கு வரும். உத்தியோகம் சிறக்கும்.

கும்பம்: குடும்பத்தில் வீண் விவாதங்கள் வேண்டாம். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். உழைப்புக்கு ஏற்ற வகையில் அங்கீகாரம் கிடைக்கும். சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும்.

மீனம்: தம்பதிக்குள் விட்டுக் கொடுக்கவும். சொந்த ஊர் பயணங்கள் உற்சாகம் தரும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வங்கிக்கடன் கிடைக்கும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் குறை கூறாதீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in