

மேஷம்: பிரபலங்கள் வீட்டு சுபநிகழ்ச்சியில் பங்கேற் பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று நடப்பார்கள். உத்தியோகத் தில் உயர் அதிகாரியின் ஆதரவு உண்டு.
ரிஷபம்: சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. எடுத்த வேலையை முடிக்க போராடுவீர்கள். வியாபாரத் தில் லாபம் உண்டு. ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு உண்டாகும்.
மிதுனம்: மனதில் உற்சாகம், தைரியம் பிறக்கும். வருங்காலம் பற்றிய பயம் விலகும். பணப் பிரச்சினையை சமாளிக்க வழி கிடைக்கும். வியாபாரத்தில் முக்கியமான வர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கடகம்: எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். பிரபலங் களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கல்யாண பேச்சு வார்த்தைகள் நல்லபடியாக முடியும்.
சிம்மம்: குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டு. அவர்கள் ஆசைப்பட்ட பொருட் களை வாங்கி தருவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
கன்னி: நெளிவு, சுளிவுடன் செயல்பட்டு முக்கிய வேலை களை முடிப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்று தீரும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.
துலாம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக் கும். தெளிவான முடிவுகளால், சுற்றி உள்ளவர்களின் நன் மதிப்பை பெறுவீர்கள். தொழில் பங்குதாரர்கள் முழு ஒத்துழைப்பு தருவார்கள்.
விருச்சிகம்: கைமாற்றாக கேட்ட பணம் கிடைக்கும். சொத்து பிரச்சினைகள் தீரும். பிரபலங்கள் வீட்டு விசே ஷங்களில் பங்கேற்பீர்கள். உங்களால் ஆதாயமடைந்த சிலர் உங்களை சந்திப்பார்கள்.
தனுசு: எடுத்த வேலைகள் தடைபட்டு முடியும். வியா பாரத்தில் போட்டிகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள். அரசு, வங்கி கடன் உதவிகள் சற்று தாமதமாகி வரும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.
மகரம்: சவாலான காரியங்களையும் செய்து, பாராட்டு பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஒற் றுமை பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள்.
கும்பம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பழைய நண்பர்கள் உங்கள் உதவியை நாடி வருவார்கள். தாயின் மருத்துவ செலவுகள் படிப்படியாக குறையும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டு.
மீனம்: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச் சுக்கு ஆதரவு கூடும். தந்தை வழி சொந்தங்கள் தேடி வருவார்கள். பல வகையிலும் பொருட்கள் சேரும்.