இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: அடுக்கடுக்காக இருந்து வந்த செலவுகள் குறையும். சவாலான காரியங்களையும் எடுத்து முடிப்பீர். வியாபாரரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் மீது இருந்த வீண் பழி அகலும்.

ரிஷபம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராக பேசி காரியம் சாதிப்பீர். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். பங்குதாரரின் ஆலோசனைப்படி நடக்கவும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த நன்மையுண்டு.

மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

கடகம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பிள்ளைகளின் உடல்நிலை பாதிக்கும். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். பங்குதாரர்களுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்கவும். உத்தியோகம் சிறக்கும்.

சிம்மம்: பழைய நினைவுகளில் மூழ்குவீர். சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். இடமாற்றம் கிடைக்கும்.

கன்னி: வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருகை தருவர். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்த்துவிடவும்.

துலாம்: சொந்த பந்தங்களிடையே மதிப்பு, மரியாதை கூடும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரக்கூடும். மூத்த சகோதரர்கள் பண உதவி செய்வர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் கிடைக்கும்.

விருச்சிகம்: மகிழ்ச்சியுடன் காணப்படுவீர். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்களில் வெற்றி உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர். வியாபாரரீதியாக பயணம் மேற்கொள்வீர்கள்.

தனுசு: குடும்ப உறுப்பினர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் பாக்கியை வசூலிப்பீர். அலுவலகத்தில் சமயோஜிதமாக செயல்பட்டு, அனைவரது பாராட்டையும் பெறுவீர்.

மகரம்: எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் வரும். வீட்டில் பழுதான பொருட்களை மாற்றிவிட்டு புதிய பொருட்களால் அலங்கரிப்பீர். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

கும்பம்: புதியவர்கள் அறிமுகமாவர். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர். வழக்கு சாதகமாக முடியும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மீனம்: சிக்கனமாக செலவழித்து சேமிப்பீர். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் அமைதி காப்பது நன்மை தரும்.

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in