Published : 25 May 2024 05:15 AM
Last Updated : 25 May 2024 05:15 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

பொதுப்பலன்: மதில் சுவர் எழுப்ப, தூண் அமைக்க, மருந்துண்ண, வன மூலிகைகளில் மருந்து தயாரிக்க, செங்கல் சூளைக்கு நெருப்பிட, வாகனம் வாங்க விற்க, அதிகாரிகளை சந்திக்க நல்ல நாள். சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், நீல மலர்களால் அர்ச்சனை செய்து எள் அன்னம் நிவேதனம் செய்தால், மன அமைதி பெறலாம். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதால் தடைகள் விலகும். விஷ்ணு சஹஸ்ரநாமம், விநாயகர் அகவல் படித்தால் எதையும் சமாளிக்கும் திறன் கிடைக்கும்.

மேஷம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளால் சுற்றியிருப்பவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் வளைந்து கொடுத்து போவார்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கூடும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும்.

ரிஷபம்:முக்கிய பிரமுகர்களின் வீட்டு விசேஷங்களில் குடும்பத்துடன் பங்கேற்பீர். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பழகவும். சகோதர வகையில் வீண் செலவு, அலைச்சல் வரும். வியாபாரம் சூடு பிடித்து, லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களுடன் இணக்கமாக செல்வது நல்லது.

மிதுனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களின் உதவியை நாடி பழைய நண்பர்கள் வருவர். தாயாருக்கு அடிக்கடி இருந்து வந்த மருத்துவச் செலவு குறையும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் வரும். ஓரளவு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு. கவுரவ பதவிக்கு தேர்வு செய்யப்படுவீர். பொறுப்பு கூடும்.

கடகம்: உறவினர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபம் விலகும். பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர். அக்கம் பக்கத்தினரின் அன்புத்தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களுடன் சேர்ந்து தொழிலை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் உங்கள் அருமை புரிந்து,மதிப்பு உயரும்.

சிம்மம்: நெளிவு, சுளிவுகளை அறிந்து கடினமான வேலைகளை முடிப்பீர். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்து விடவும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். எதிர்பார்த்த கடனுதவி கிட்டும். அலுவலகத்தில் உங்கள் மீதான பழி அகலும். மேலதிகாரி பாராட்டுவார்.

கன்னி: பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர். பிரபலங்களின் நட்பு கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. தாயாரின் உடல்நிலை சீராகும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் உண்டு. வியாபாரம் சூடு பிடிக்கும். ஓரளவு லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

துலாம்: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களுடன் எதிர்பாராத சந்திப்பு நிகழும். உடன் பிறந்தவர்களின் உதவியுடன் பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். வேற்றுமொழி பேசுபவர், வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு. மதிப்பு உயரும்.

விருச்சிகம்: பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர். மனைவிவழி உறவினர்கள் தேடி வருவர். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். புதிய பங்குதாரர்களை சேர்ப்பதற்கு முன் நன்றாக யோசனை செய்யவும். உத்தியோகத்தில் உங்களின் பணி சிறப்பாக இருக்கும்.

தனுசு: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல், வீண் செலவு வரக் கூடும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர். சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாகச் செல்லவும். யாருடனும் உங்களை ஒப்பிட வேண்டாம்.

மகரம்:எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் உதவுவார்கள். உடன்பிறந்தவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த புது முயற்சிகள் எடுப்பீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் திரும்பி வருவர். உத்தியோகத்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.

கும்பம்: நீண்ட நாட்களாக தள்ளிப்போய் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிக்கு தேதி குறிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு. சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு உயரும். புதிய பதவி கிடைத்து பொறுப்புகள் கூடும்.

மீனம்: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். முன்கோபத்தை குறைத்து கொள்ளவும். மனைவியுடன் இருந்த மோதல் நீங்கும். மாணவர்கள் உற்சாகமாக காணப்படுவார்கள். புதிய பங்குதாரர்களுடன் இணைந்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x