இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
2 min read

பொதுப்பலன்: புது ஆடை அணிய, பெரியோரிடம் ஆசி பெற, பழைய நட்பை புதுப்பிக்க, மின்னணு சாதனங்கள் வாங்க, சொத்து விவகாரங்கள் பேச, மூலிகை மருந்துண்ண, இசை பயில, மாடு வாங்க நல்ல நாள். செவ்வாய் பகவானுக்கு பால் அபிஷேகம், செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்தால் தடைகள் விலகும். ராகு காலத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதால் நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் படிப்பதால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

மேஷம்: வீண் அலைச்சல் அதிகரிக்கும். யாருக்கும் உறுதி மொழி தர வேண்டாம். கணவன் - மனைவி ஒருவருக் கொருவர் மனம் விட்டு பேசுவதால் பிரச்சினை தீரும். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும்.

ரிஷபம்: விடாப்பிடியாக இருந்து சில வேலைகளை முடிப்பீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப் பற்றாக்குறை நீங்கும். வியாபாரத்தில் திட்டமிட்டபடி லாபம் அதிகரிக்கும்.

மிதுனம்: நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவர். புதிய வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார், அல்லாதவர் யார் என்பதை கண்டறிவீர்.

கடகம்: தேவைகள் பூர்த்தியாகும். இழுபறியாக இருந்து வந்த வழக்குகள் சாதகமாகும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர். பங்குதாரர்களின் ஆதரவுடன் வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்.

சிம்மம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். அரசால் அனுகூலம் உண்டு. முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக் கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. கலை பொருட்கள் சேரும்.

கன்னி: பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து வருந்துவீர்கள். தம்பதிக்குள் ஈகோ பிரச்சினைகள் வரும். சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க திட்டமிடுவீர்.

துலாம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர் . கணவன் - மனைவிக்குள் பரஸ்பர புரிதல் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

விருச்சிகம்: பண வரவால் அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். வியாபாரம் சூடு பிடித்து, பழைய பாக்கிகள் வசூலாகும்.

தனுசு: எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். உத்தியோகத்தில் இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்கள்.

மகரம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சேமிக்கும் எண்ணம் தோன்றும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் வேற்று மொழி பேசும் வாடிக்கையாளர்கள் வருவார்கள்.

கும்பம்: அரசு காரியங்களில் இருந்து வந்த தடை விலகும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். பயணங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் புதிய பதவி கிடைத்து, பொறுப்பு கூடும்.

மீனம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் இனி ஓடி வந்து பேசுவார்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வாகனத்தை மாற்றுவீர்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in