இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
2 min read

பொதுப்பலன்: முன்னோரை வழிபட, அன்னதானம் செய்ய, மூலிகை மருந்து தயாரிக்க, மருந்து உண்ண, புதிய திட்டங்கள் தீட்டி செயல்படுத்த, வழக்குகள் பேசித் தீர்க்க, வாகனம் விற்க, தியானம் செய்ய நன்று. சிவஸ்துதி படித்து, சிவன் கோயில்களில் aஅபிஷேக, அர்ச்சனை செய்து, எள் தீபம் ஏற்றினால் நன்மை உண்டாகும். பச்சரிசி அல்லது நெல் தானம் செய்தால், நீண்ட நாளாக இழுபறியாக இருந்த காரியங்கள் நிறைவேறும்.

மேஷம்: சுறுசுறுப்பாக செயல்பட்டு வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உங்கள் உடல்நலம் சீராகும். வியாபாரம் சூடுபிடிக்கும். பழைய பாக்கி வசூலாகும்.

ரிஷபம்: சாதுர்யமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். தோற்றப் பொலிவு கூடும். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். தொழிலில் போட்டி குறையும்.

மிதுனம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உடல்நலத்தில் கவனம் தேவை. உங்கள் முன்னேற்றத்துக்கு தடையாக இருந்த சிக்கல்கள், இடையூறுகள் விலகும்.

கடகம்: மனப் போராட்டம் ஓயும். சமயோசிதமான பேச் சால், தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பண வரவு உண்டு. வியாபாரத்தில் போட்டிகள் நீங்கும்.

சிம்மம்: தலைசுற்றல், வயிற்றுப்போக்கு வந்து நீங்கும். தேவையற்ற கவலை, அச்சம், மனக் குழப்பங்கள் விலகும். தெய்வ வழிபாடு மனநிறைவை தரும். பண வரவு, பொருள் வரவு உண்டு.

கன்னி: நீங்கள் ஏற்கெனவே செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரத்தில் புது சரக்குகள் கொள்முதலாகும்.

துலாம்: மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். பழைய கடனை நினைத்து வருந்த வேண்டாம். அதை தீர்க்க புது வழி பிறக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

விருச்சிகம்: தொட்டது துலங்கும். தடைகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் விறுவிறுப்பாக நடந்து முடியும். அரசு, வங்கி சம்பந்தப்பட்ட காரியங்கள் உடனடியாக நிறைவேறும்.

தனுசு: இங்கிதமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பி தருவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். ஆன்மிக நாட்டம் கூடும்.

மகரம்: உங்கள் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பேச்சில் பொறுமை தேவை.

கும்பம்: பழைய மனக் கசப்புகள் நீங்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

மீனம்: குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. அக்கம் பக்கத்தினரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடைவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in