Published : 30 Mar 2024 05:08 AM
Last Updated : 30 Mar 2024 05:08 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

பொதுப்பலன்: தற்காப்புக் கலைகள், இசை, நடனம் பயில, மகான்களை தரிசிக்க, பழைய வாகனம் விற்க, மின்னணு,மின்சார சாதனங்கள் வாங்க, காவல், வன தெய்வங்களை வணங்க, கெமிக்கல் வியாபாரம் தொடங்க, மூலிகை குளியல் செய்ய நல்ல நாள். சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், நீல மலர்களால் அர்ச்சனை செய்து எள் அன்னம் நிவேதனம் செய்தால், மன அமைதி பெறலாம். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதால் தடைகள் விலகும். விஷ்ணு சஹஸ்ரநாமம், விநாயகர் அகவல் படித்தால் எதையும் சமாளிக்கும் திறன் கிடைக்கும்.

மேஷம்: மறைமுக அவமானம் ஏற்படக் கூடும். குலதெய்வம் கோயில் முக்கிய நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பழைய கடன் சுமையை நினைத்து அவ்வப்போது நிம்மதி இழப்பீர்கள்.

ரிஷபம்: முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு கிட்டும். புது நண்பர்கள் அறிமுகமாவார்கள். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும்.

மிதுனம்: வீட்டில் தடைபட்டிருந்த சுபகாரியங்கள் இனி தடபுடலாக நடந்தேறும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் போட்டிகளை தகர்ப்பீர். கையில் பணம் புரளும்.

கடகம்: தடைபட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்கள் இனி தடபுடலாக நடக்கும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.

சிம்மம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். மனதில் நேர்மறை சிந்தனைகள் தோன்றும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வாகனத்தை சீர் செய்வீர்கள். மனைவிவழியில் ஆதாயம் உண்டு.

கன்னி: அடிமனதில் இருந்த பயம், குழப்பம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். அலைச்சல் தந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அனுசரித்து போவீர்கள்.

துலாம்: உங்களின் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். புது ஆடை ஆபரணங்கள் சேரும். குடும்பத்தில் திருமணம், சீமந்தம் என்று கலகலப்பான சூழல் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்.

விருச்சிகம்: நீங்கள் நல்லது சொல்லப் போய் சிலர் தவறாக புரிந்து கொள்வார்கள். உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. அலைச்சலும், செலவுகளும் இருக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

தனுசு: புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர்கள். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் உயரதிகாரியுடனான மனக் கசப்புகள் நீங்கும். வெளியூர் பயணங்களால் உற்சாகமடைவீர்கள்.

மகரம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மனநிம்மதி கிட்டும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

கும்பம்: மனதுக்கு இதமான செய்தி வந்து சேரும். உடல் சோர்வு, வயிற்றுவலி சீராகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும்.

மீனம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். சேமிப்புகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x