இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
2 min read

பொதுப்பலன்: காவல், வனதெய்வங்களை வணங்க, கெமிக்கல் வியாபாரம் தொடங்க, தற்காப்புக் கலைகள் பயில, வாகனம் விற்க, சித்தர் பீடத்தை வழிபட, மருந்துண்ண, வளர்ப்பு பிராணிகள் வாங்க, மூலிகை குளியல் செய்ய நல்ல நாள். சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், நீல மலர்களால் அர்ச்சனை செய்து எள் அன்னம் நிவேதனம் செய்தால், மன அமைதி பெறலாம். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதால் தடைகள் விலகும். விஷ்ணு சஹஸ்ரநாமம், விநாயகர் அகவல் படித்தால் எதையும் சமாளிக்கும் திறன் கிடைக்கும்.

மேஷம்: அறிஞர், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி தங்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பர். சிலருக்கு பெரிய பொறுப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பர்.

ரிஷபம்: முன்கோபத்தை குறையுங்கள். வீட்டில் ஓரளவு அமைதியுண்டு. அடுத்தவர் விஷயத்தில் அநாவசியமாக மூக்கை நுழைக்க வேண்டாம். பழைய வழக்குகளில் சாதகமான சூழலை எதிர்பார்க்கலாம். பணவரவு உண்டு.

மிதுனம்: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். வழக்கு சாதகமாகும்.

கடகம்: வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. உத்தியோகத்தில் பிரச்சினை தீர்ந்து நிம்மதி பிறக்கும்.

சிம்மம்: வீட்டில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரியும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். உடல் நிலை சீராக அமையும். வீண் அலைச்சல், டென்ஷன் குறைந்து முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்.

கன்னி: தடைபட்டுவந்த காரியங்கள் அனைத்தும் சுமுகமாக முடியும். சொந்தம் - பந்தங்களுக்கு மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். வியாபார ரீதியாக சில முக்கிய பிரமுகர்களை சந்திக்க நேரும். பணவரவு திருப்தி தரும்.

துலாம்: நெருங்கியவர்களால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். வீண் விவாதம் வேண்டாம். பிள்ளைகளின் படிப்பு குறித்த டென்ஷன், அலைச்சல் விலகும். பழைய வழக்கில் வெற்றி உண்டு.

விருச்சிகம்: திறமையாக சில வேலைகளை முடிப்பீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் ஏற்பட்ட சுணக்கம் நீங்கும்.

தனுசு: குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கி நிம்மதி தங்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர். போட்டி இருந்தாலும் வியாபாரத்தில் லாபமுண்டு. மகளின் திருமணம் கைகூடும்.

மகரம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். குழப்பம் நீங்கி கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

கும்பம்: பணப் பற்றாகுறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தாயின் உடல் நலம் சீராகும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.

மீனம்: சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். விருந்தினர் வருகையால் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல் நலம் சீராக இருக்கும். வாகனச் செலவுகள் நீங்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in