இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
2 min read

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் செய்ய, வியாபாரம் தொடங்க, சொத்துப் பத்திரப் பதிவு செய்ய, புது வேலையில் சேர, தாலிக்கு பொன் உருக்க, தங்க நகைகள் வாங்க நன்று. திருமணப் பேச்சுவார்த்தை நடத்த இந்நாள் பொன்னாள் ஆகும். பழைய வழக்குகள் தொடர்பாக வழக்கறிஞரைக் கலந்தாலோசித்து முடிவு செய்வது நல்லது. நரசிம்ம மூர்த்திக்கு பானகம் கரைத்து நிவேதனம் செய்வது நல்லது.

மேஷம்: அடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர். கணவன் - மனைவிக்குள் அனுசரித்து போவீர். பணவரவு திருப்தி தரும். அலைச்சல் தந்த வேலைகளை உடனே முடிப்பீர்.

ரிஷபம்: வீண் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். அதிரடி திட்டங்களை தீட்டுவீர். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். முக்கிய பிரமுகர்கள், ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும்.

மிதுனம்: பழைய உறவினர்கள், பால்ய நண்பர்கள் தேடி வருவர். முகப் பொலிவு கூடும். உங்களின் குறிக்கோளை எட்டிப்பிடிப்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த சிலரின் உதவியை நாடுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கடகம்: உத்தியோகத்தில் உற்சாகமாக செயல்படுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. பழைய சரக்குகள் விற்று தீரும்.

சிம்மம்: வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பேச்சில் தெளிவு பிறக்கும். குழப்பங்கள் தீர்ந்து கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் பிறக்கும். அலுவகத்தில் நிம்மதியுண்டு.

கன்னி: முன்கோபத்தை குறையுங்கள். உடல்நலக் குறைவு ஏற்படும். எந்த விஷயத்தையும் திட்டமிட்டு செய்வது நல்லது. அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பழகவும்.

துலாம்: விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.

விருச்சிகம்: வராதிருந்த உறவினர்கள், நண்பர்கள் தேடி வருவர். வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை கூடும். பிள்ளைகளால் மனநிம்மதி கிட்டும். சொத்து தொடர்பான வில்லங்கம் விலகும். புதிய வாகனம் வாங்குவீர்.

தனுசு: முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். வாகனம் சீராகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

மகரம்: குடும்பத்தில் அமைதி நிலவும். நட்பு வட்டாரம் விரியும். கடன் பிரச்சினைகளுக்கு மாற்றுவழி காண்பீர். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு.

கும்பம்: மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். புதிய வீடு வாங்க கடனுதவி கிடைக்கும்.

மீனம்: உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு உண்டு. பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் நிதானமாக செயல்படுவது அவசியம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in