Published : 13 Jan 2024 06:00 AM
Last Updated : 13 Jan 2024 06:00 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வீண்செலவுகளை தவிர்த்து விடுவீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர்கள். வியாபார ரீதியாக புது நபர்களைச் சந்திப்பீர்கள்.

ரிஷபம்: பணப்பற்றாக்குறை நீங்கி சேமிப்பு கூடும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள்.

மிதுனம்: ஒருவித படபடப்பு வந்து செல்லும். கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினைகள் வரக்கூடும். தாழ்வுமனப் பான்மை அதிகரிக்கும். வரவேண்டிய பணம் இழுபறிக்கு பின்னர் கைக்கு வரும். வேலைசுமை கூடும்.

கடகம்: உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரும். வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க லாபம் உண்டு. வீண் குழப்பங்கள் நீங்கும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.

சிம்மம்: அதிரடியாகத் திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தந்தைவழியில் ஆதாயம் உண்டு. உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள், ஆன்மிகவாதிகளின் சந்திப்பு எதிர்பாராமல் நிகழும்.

கன்னி: அடிமனதில் இருந்த பயம் நீங்கி, துணிச்சலான சில முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். பிள்ளைகளால் பெருமையுண்டு. பணவரவு அதிகரிக்கும்.

துலாம்: உங்களின் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். வெளியூர் பயணம் ஏற்படும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். தந்தையின் உடல்நிலை சீராகும். அக்கம்பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிட்டும்.

விருச்சிகம்: மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. வீண் செலவுகள் குறையும். குடும்பத்தினரின் எண்ணங்களை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள்.

தனுசு: வெளிவட்டாத்தில் மதிப்பு, மரியாதை கூடும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வீட்டிலுள்ள பழைய பொருட்களை மாற்றுவீர்கள். குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள்.

மகரம்: திடீர் பயணங்கள், ஆழ்ந்த உறக்கமின்மை வந்து செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியம் காட்ட வேண்டாம். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வந்து போகும். அதிரடியான முடிவுகளை எடுக்காதீர்கள்.

கும்பம்: பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

மீனம்: குடும்பத்தாரின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். பழைய வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x