Published : 01 Dec 2023 06:44 AM
Last Updated : 01 Dec 2023 06:44 AM
மேஷம்: வீடு, மனை வாங்கும் யோசனை பிறக்கும். தாய்வழி உறவுகளால் மனக்கசப்புகள் வரக்கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு. பிள்ளைகளிடம் கோபம் கொள்ள வேண்டாம்.
ரிஷபம்: பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியம் வரும். தோல்வி பயம் நீங்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவுக் கரம் நீட்டுவர்.பழைய கடன்களை ஒவ்வொன்றாக தீர்க்க வழி கிடைக்கும். விருந்தினர் வருகை உண்டு.
மிதுனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை கேட்டறிந்து ஒவ்வொன்றாக நிறைவேற்றுவீர்கள். தம்பதிக்குள் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். புதிய ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வாகனம் செலவு வைக்கும்.
கடகம்: முன்கோபம் அதிகமாகும். வழக்குகள் இழுபறியாகும். கடந்த காலத்தில் இழந்த நல்ல வாய்ப்புகளை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.
சிம்மம்: கருத்து மோதலால் நெடுநாள் பழகிய நண்பர் ஒருவரின் நட்பை இழக்க நேரிடும். பண விஷயம், வழக்குகளில் எச்சரிக்கையாக இருங்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் சின்னச் சின்ன தடைகள் வரக்கூடும்.
கன்னி: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். உங்களுடைய பலம், பலவீனங்களை உணர்ந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். பூர்வீக வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.
துலாம்: மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். மகளின் திருமணத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம்.
விருச்சிகம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய கடன்களை ஒவ்வொன்றாகத் தீர்க்க புது வழி பிறக்கும். குடும்பத்தில் கூச்சல், குழப்பம் நீங்கி கலகலப்பான சூழல் உருவாகும். விருந்தினர் வருகை உண்டு
தனுசு: வாகனத்தில் அதிக வேகமாகச் செல்வதை தவிர்க்கவும். உங்கள் சக்திக்கு மீறி எந்த உறுதிமொழியும், யாருக்கும் தர வேண்டாம். கூடுதல் செலவுகளால் திணறுவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் அளவாகப் பழகவும்.
மகரம்: சமயோஜித புத்தியால் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். யதார்த்தமாகவும், தத்துவமாகவும் பேசி எல்லோருடைய இதயத்திலும் இடம் பிடிப்பீர்கள். வெளியூர் பயணம் திட்டமிட்டபடி நடக்கும்.
கும்பம்: பழைய வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். புதிய பதவி தேடி வரும். கடந்த காலத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இப்போது ஆதரவாக நெருங்கி வர வாய்ப்பு உண்டு. பணவரவு திருப்தி தரும்.
மீனம்: முன்கோபம் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.நெருங்கிய நண்பர்களை சந்தித்து பேசுவீர்கள். தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT