Published : 29 Nov 2023 05:27 AM
Last Updated : 29 Nov 2023 05:27 AM
மேஷம்: குழப்பங்களில் இருந்து மீண்டு, அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மிகப் பெரியோருடன் சந்திப்பு நிகழும்.
ரிஷபம்: அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கிரஹப்பிரவேசம், திருமணம், சீமந்தம் என்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.
மிதுனம்: வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். அடுத்தவர்களின் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. பணவரவு உண்டு.
கடகம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போகவும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். நண்பர்கள், உறவினர்களுடன் பகைமை வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும்.
சிம்மம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
கன்னி: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் பிறக்கும். தாயார்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.
துலாம்: மனக் குழப்பங்கள் விலகும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்
தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும்.
விருச்சிகம்: பல வேலைகளையும் நீங்களே இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உதவி கேட்டு உறவினர், நண்பர்கள் தர்மசங்கடத்துக்கு ஆளாக்குவர். பழைய பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்கும்.
தனுசு: நண்பர்கள், உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதைகூடும். பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் குறைகளை சுட்டிக் காட்டி நல்வழிப்படுத்துவீர்கள்.
மகரம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர்கள். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த சொத்துப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
கும்பம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். சிந்தனை திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். புதிய பொறுப்புகள், பதவி உங்களைத் தேடி வரும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.
மீனம்: துடிப்புடன் காணப்படுவீர்கள். தம்பதிக்குள் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து, மகிழ்ச்சியுண்டு. விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். தாயாருடன் கருத்து மோதல் வந்து நீங்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT