Published : 19 Nov 2023 07:55 AM
Last Updated : 19 Nov 2023 07:55 AM
மேஷம்: பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர். தேவையற்ற குழப்பங்களிலிருந்து விடுபடுவீர். அனைத்து காரியங்களும் தடையின்றி முடியும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.
ரிஷபம்: மகன், மகளின் திருமணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். முக்கிய பிரமுகர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கவுரவிக்கப்படுவீர்.
மிதுனம்: திடீர் செலவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லி கொண்டிருக்காதீர்கள். பிள்ளைகளின் படிப்பு விஷயம் தொடர்பாக நிறைய அலைச்சல் இருக்கும்.
கடகம்: குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். பழுதாகியிருந்த பழைய வாகனத்தை மாற்றி புதிது வாங்குவீர்கள். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நிகழும். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகவும்.
சிம்மம்: எந்த தடைகள், பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை சாமர்த்தியமாக சமாளிக்கும் சக்தி கிடைக்கும். விஐபிகளால் சில வேலைகள் முடிவடையும். நீண்ட நாளாக இழுத்தடித்த வழக்கு நிறைவுபெறும்.
கன்னி: எல்லா வகையிலும் வெற்றி கிட்டும். நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்கு வரும். பெரிய மனிதர்கள் ஆதரவாக இருப்பார்கள். திடீர் பணவரவு உண்டு. நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.
துலாம்: நண்பர்கள், உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். பழைய இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். சகோதரர்களின் உதவியால் பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும்.
விருச்சிகம்: விஐபிகள் அறிமுகமாவார்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வேற்றுமாநிலம் செல்லும் வாய்ப்பு வரும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பணவரவு உண்டு.
தனுசு: நீண்ட நாளைய எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். பிள்ளைகள் வளாக நேர்காணலில் தேர்வு செய்யப்படுவார்கள்.
மகரம்: தாழ்வு மனப்பான்மை வந்து போகும். யாரை நம்புவது,நம்பாமல் இருப்பது என்பதில் குழப்பம் வரும். கையொப்பமிட்டு காசோலைகளை வைக்க வேண்டாம். குலதெய்வ பிரார்த்தனைகளை செய்து முடிப்பீர்கள்.
கும்பம்: வேலைச்சுமை இருக்கும். பணவரவு உண்டு. எந்த ஒரு விஷயத்தையும்,நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. நண்பர்களுடன் சேர்ந்து புதிய தொழில் தொடங்க முயற்சி மேற்கொள்வீர்.
மீனம்: மகிழ்ச்சிகரமான செய்திகள் வரும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பேசி பழகவும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT