Published : 05 Nov 2023 07:32 AM
Last Updated : 05 Nov 2023 07:32 AM
மேஷம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். புதிதாக வாகனம் வாங்கும் அமைப்பு உண்டாகும். தாய்வழி உறவினர்களுடன் மோதல் போக்கை தவிர்க்கவும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.
ரிஷபம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.வழக்கும் சாதகமாகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்து வந்த ஈகோ பிரச்சினைகள் நீங்கும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனம் தேவை.
மிதுனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். தம்பதிக்குள் நெருக்கம் உண்டாகும். குடும்பத்தில் மூன்றாம் நபர் தலையீட்டைத் தவிர்க்கவும்.
கடகம்: உடல் உஷ்ணம் அதிகரிக்கும். யாருக்கும், எதற்காக வும் உறுதிமொழி தர வேண்டாம். சொந்த ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் பணி வாய்ப்பு அமையும்.
சிம்மம்: அரசு காரியங்கள் விரைவாக முடியும். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். கலை பொருட்கள் சேரும். குடும்பத்துடன் சென்று குல தெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். திடீர் செலவுகள் உண்டு.
கன்னி: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு உண்டு. எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பர். பிள்ளைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள்.
துலாம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். உறவினர்கள், நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும்.
விருச்சிகம்: சவாலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். புதிய வாகனம், வீடு வாங்க திட்டமிடுவீர்கள்.
தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.பழைய சொந்த - பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். மகனுக்கு புது வேலை அமையும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டத் திட்டமிடுவீர்கள்.
மகரம்: இங்கிதமாகவும், இதமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கவுரவமும் ஒருபடி உயரும். நீண்ட நாளைய இழுபறி வழக்குகளில் முன்னேற்றம் இருக்கும்.
கும்பம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்து காட்டுவீர். அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர். புதிய பதவிகள், பொறுப்புகள் உங்களை தேடி வரும்.
மீனம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்தி கொள்வீர். ஆன்மிக பெரியோரின் நட்பு கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பர். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் விவாதம் வேண்டாம்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT