Published : 29 Oct 2023 05:51 AM
Last Updated : 29 Oct 2023 05:51 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: கணவன் - மனைவிக்குள் வீண் மனஸ்தாபம் வந்து நீங்கும். நண்பர்களில் யாரை நம்புவது என்ற மனக் குழப்பத்துக்கு ஆளாவீர். நீங்கள் சாதாரணமாக சொல்லும் விஷயம் கூட விபரீதமாக புரிந்து கொள்ளப்படும்.

ரிஷபம்: சகோதர வகையில் சொத்து பிரச்சினைகள் வந்து நீங்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். மனைவியுடன் கருத்து மோதல்கள் வரும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உருவாகும்.

மிதுனம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இன்றைய தினம் வேலைச்சுமை குறையும். பழைய வாகனம் செலவு வைக்கும்.

கடகம்: உங்களை சுற்றியிருப்பவர்களால் இருந்துவந்த தொல்லைகள் அகலும். பணவரவு உண்டு. வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

சிம்மம்: பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். நிறைவடையாமல் இருந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
வாகனத்தை சீர் செய்வீர்கள். பணவரவு உயரும்.

கன்னி: மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். இழுபறியாக இருந்த வழக்குகளில் முன்னேற்றம் இருக்கும்.

துலாம்: சாதுர்யமாக பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். புது ரக ஆடை ஆபரணங்கள் அணிந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். எதிலும் நிதானம் அவசியம்.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும்.

தனுசு: மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். நட்பு வட்டம் விரியும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். அக்கம் பக்கத்தினரிடம் அளவாக பேசிப் பழகவும்.

மகரம்: சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். ஓரளவு பணம் வரும். பழைய வாகனத்தை சீர்செய்வீர்கள். தந்தைவழி உறவினர்களால் ஆதாயமுண்டு. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

கும்பம்:கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் பேச்சை ரசிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பண உதவி கிடைக்கும். அக்கம் - பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை விலகும்.

மீனம்: நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். அரசு காரியங்களில் ஆர்வம் காட்டுவீர். பணவரவு திருப்தி தரும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x