Published : 15 Oct 2023 05:55 AM
Last Updated : 15 Oct 2023 05:55 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: உங்களுக்குள் இருந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் நன்மை உண்டு. மகளின் கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். மனைவிவழி உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

ரிஷபம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். நண்பர்கள், உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

மிதுனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சொந்த - பந்தங்களுடன் சென்று குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும்.

கடகம்: நட்பு வட்டம் விரியும். உங்களை குழப்பிக் கொண்டிருக்கும் பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

சிம்மம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள்.

கன்னி: கணவன் - மனைவிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பான அலைச்சல் இருக்கும்.

துலாம்: அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்த வேண்டும். மற்றவர்களுக்கு நியாயம் பேச போய் பெயரை கெடுத்து கொள்ளாதீர்கள். பண விஷயத்தில் கறாராக இருப்பது நன்மை பயக்கும். வாகனம் செலவு வைக்கும்.

விருச்சிகம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். தியானம் செய்யவும்.

தனுசு: சின்ன சின்ன வாய்ப்புகளை சமயோஜிதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். பெற்றோரின் ஆதரவு உண்டு. பழைய பிரச்சினைகளை நினைத்து மனம் கலங்க வேண்டாம். தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.

மகரம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பணவரவு திருப்தி தரும்.

கும்பம்: குடும்பத்தினருடன் கிரஹப்பிரவேசம், திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும்.

மீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். யாரும் உங்களை புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x