Published : 12 Oct 2023 06:00 AM
Last Updated : 12 Oct 2023 06:00 AM
மேஷம்: உடன் பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மகளின் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்கள் ஆலோசனை எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும். கலை பொருட்கள் சேரும்.
ரிஷபம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். பணவரவு திருப்தி தரும்.
மிதுனம்: பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லைகள் விலகும். குடும்பத்தினருடன் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பழைய வாகனத்தை விற்க முயற்சி செய்வீர்கள்.
கடகம்: குழப்பம் நீங்கி, குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும்.
சிம்மம்: பழைய இனிய நினைவுகளில் மூழ்குவீர்கள். அலுவலகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். மாலையில் இருந்து தடைபட்ட வேலைகள் ஒவ்வொன்றாக நிறைவடையும்.
கன்னி: கணவன் - மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். பிள்ளைகளை அவர்கள் விரும்பும் படிப்பில் சேர்ப்பது நல்லது.
துலாம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர். சகோதரர்களால் பயனடைவீர். அரசால் அனுகூலம் உண்டு. நீண்ட நாளாக இழுத்தடித்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.
விருச்சிகம்: பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். சகோதரர் பாசமழை பொழிவார். இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.
தனுசு: பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர். நீண்ட நாளாக எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வழக்குகளில் வெற்றி காண்பீர்.
மகரம்: நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். மாலையிலிருந்து குழப்பங்கள் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். குடும்ப பிரச்சினைகளை மற்றவர்களிடம் கூற வேண்டாம்.
கும்பம்: பிள்ளைகளின் சாதனைகளால் மதிப்பு கூடும். மகளின் கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக அமையும். மாலை முதல் அதிகம் உழைக்க வேண்டி வரும். தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும்.
மீனம்: மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டுமென நினைப்பீர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பீர். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்ய திட்டமிடுவீர்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT