Published : 28 Sep 2023 05:40 AM
Last Updated : 28 Sep 2023 05:40 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குறிக்கோளை எட்டிப் பிடிக்க முயற்சிப்பீர். கிரஹப்பிரவேசம், திருமணம் என்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் அடிமனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வீர்.

ரிஷபம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

மிதுனம்: பிரபலங்களின் சந்திப்பு நிகழும். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த மனக் கசப்புகள் விலகும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

கடகம்: குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். முக்கிய கோப்புகளை கவனமாக கையாள வேண்டும். பழைய பாக்கி தொகையை வசூலிப்பீர்கள். நண்பர்கள் ஆதரிப்பர்.

சிம்மம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். ஆடை, ஆபரணம் சேரும். மனதில் இருந்து வந்த பயம், குழப்பம் விலகும்.

கன்னி: பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகளை எடுப்பீர். இழுபறியாக இருந்து வந்த வழக்கு நல்ல விதத்தில் முடியும். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பேசிப் பழகவும். பணவரவு உண்டு.

துலாம்: முக மலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நீண்டநாள் ஆசைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். தந்தையின் உடல்நிலை சீராக இருக்கும். மனதில் வீண் பயம் வந்து நீங்கும்.

விருச்சிகம்: புது எண்ணங்கள் தோன்றும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.

தனுசு: எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சமாளிப்பீர். பேச்சுத் திறமையால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர். குடும்பத்துடன் வெளியூர் பயணம், சுற்றுலா செல்லத் திட்டமிடுவீர்.

மகரம்: கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

கும்பம்: தடைபட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சில பிரச்சினைகளுக்கு உங்கள் அவசர முடிவுகள்தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வெளி உணவுகளைத் தவிர்க்கவும்.

மீனம்: எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். நண்பர்கள், உறவினர்களால் செலவுகள் அதிகரிக்கும். சிறு சிறு அவமானங்கள் ஏற்படக் கூடும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x