Published : 25 Sep 2023 05:50 AM
Last Updated : 25 Sep 2023 05:50 AM
மேஷம்: உங்கள் பேச்சாற்றல், நிர்வாகத் திறன் அதிகரிக்கும். பண வரவு, பொருள் வரவு உண்டு. பிள்ளைகளால் மரியாதை, அந்தஸ்து உயரும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.
ரிஷபம்: எதிலும் உங்கள் கை ஓங்கும். பழுதான வாகனத்தை சரிசெய்வீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.
மிதுனம்: அநாவசியமாக யாருக்காகவும், எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து நீங்கும். நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவியை செய்வீர்கள்.
கடகம்: புது வாகனம் வாங்குவீர்கள். வரவேண்டிய தொகை கைக்கு வரும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். அவர்களது விருப்பத்தை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.
சிம்மம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். உங்கள் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பண பலம் உயரும். அரசியலில் செல்வாக்கு கூடும். விஐபிக்களிடம் இருந்து தக்க சமயத்தில் உதவி கிடைக்கும்.
கன்னி: உறவினர்கள், நண்பர்களின் கனிவான விசாரிப்புகள் ஆறுதல் தரும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். மனைவி வழி உறவினர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள்.
துலாம்: பழுதான வண்டியை மாற்றுவீர்கள். கைமாற்றாக வாங்கிய பணத்தை தந்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினைகள் தீரும். பேச்சில் பொறுமை தேவை.
விருச்சிகம்: சவாலான காரியங்களையும் சர்வ சாதாரணமாக முடித்து பாராட்டு பெறுவீர்கள். அனைத்திலும் உங்கள் தனித் திறமை பளிச்சிடும். விஐபிக்களால் பாராட்டப்படுவீர்கள். பொருள் வரவு உண்டு.
தனுசு: பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சொந்த பந்தங்கள் உங்கள் உதவியை நாடி வருவார்கள். எக்காரியத்திலும் நிதானம் தேவை.
மகரம்: உங்களுடன் பழகிக்கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை இனம்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுங்கள். பயணத்தால் ஆதாயம் உண்டு.
கும்பம்: வறட்டு கவுரவத்துக்காக சேமிப்புகளை கரைக்காதீர்கள். வேலைச்சுமை, திடீர் பயணங்கள் வந்துபோகும். கடன் பிரச்சினை அதிகமாகும். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் ஏற்படும்.
மீனம்: புதிதாக மின்னணு, மின்சார சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். புதிய நட்பு மலரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT