Published : 23 Sep 2023 05:45 AM
Last Updated : 23 Sep 2023 05:45 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தடைபட்டுவந்த காரியங்கள் அனைத்தும் இன்று சுமுகமாக முடியும். சொந்த - பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். கலை பொருட்கள் சேரும்.

ரிஷபம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனம் தேவை.

மிதுனம்: மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு உண்டு.

கடகம்: குடும்பத்தில் அமைதி நிலவும். நட்பு வட்டாரம் விரியும். கடன் பிரச்சினைகளுக்கு மாற்றுவழி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய வாகனம் செலவு வைக்கும்.

சிம்மம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். முக்கிய பிரமுகர்களுடனான சந்திப்பு நிகழும். வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

கன்னி: தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப் பற்றாக்குறை நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பழகவும்.

துலாம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். பழைய பிரச்சினைகள் ஒவ்வொன்றாக தலைதூக்கினாலும் சமாளிப்பீர்கள்.

விருச்சிகம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். தாயாரின் உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.

தனுசு: பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் பெரிய பொறுப்புகளை உங்களை நம்பி ஒப்படைப்பார்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்துவீர்கள்.

மகரம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உடல்நிலை சீராக அமையும். உறவினர்களின் வருகையுண்டு. கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள திட்டமிடுவீர். பணவரவு திருப்தி தரும்.

கும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். பழைய வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

மீனம்: வீண் பேச்சு, வீண் செலவுகளை தவிர்ப்பீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர்கள். யாருக்காகவும் எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x