Published : 17 Sep 2023 05:52 AM
Last Updated : 17 Sep 2023 05:52 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்று கொள்வீர். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புது வேலை அமையும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

ரிஷபம்: இழுபறியாக இருந்த பழைய பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையடைவீர்கள். குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

மிதுனம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர். பிரபலங்கள் நண்பர்களாவர். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பழைய வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும்.

கடகம்: திடீர் பணவரவு, செல்வாக்கு உண்டு. பழுதான வாகனம்சீராகும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். நீண்ட நாளாக மனதில் இருந்த தேவையில்லாத பயம் விலகும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

சிம்மம்: சந்தர்ப்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு சமயோஜிதமாகப் பேசும் சாமர்த்தியம் வரும். பணவரவு உண்டு. அக்கம் பக்கத்தினருடன் அளவாக பேசிப் பழகவும். உறவினர், நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும்.

கன்னி: வேலைச்சுமை அதிகரிக்கும். முடிந்துவிடும் என நினைத்த விஷயங்கள் கூட அலைய வைத்து முடியும். வாயு தொந்தரவால் நெஞ்சு வலி, வயிறு உப்புசம், அலர்ஜி வரக் கூடும். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

துலாம்: அலைச்சலுடன் ஆதாயம் உண்டு. குடும்பத்துடன் வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். வாகனம், வீடு பராமரிப்பு செலவுகள் அதிகமாகும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

விருச்சிகம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பிள்ளைகள் உங்களை புரிந்து கொள்ளாமல் இருப்பார்கள்.

தனுசு: புதிய திட்டங்கள் நிறைவேறும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். நண்பர்களுடன் சேர்ந்து புதிய தொழில் தொடங்குவீர்கள்.

மகரம்: சோம்பல் நீங்கி உற்சாகமாக காணப்படுவீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். அழகு, இளமை கூடும். ஃப்ரிட்ஜ்,
வாஷிங் மெஷின் வாங்குவீர். மன அமைதி பெற தியானம் செய்யவும்.ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும்.

கும்பம்: பழைய பிரச்சினைகள் தலை தூக்கும். வீண் பயம், கவலைகள் தோன்றி நீங்கும். பூர்வீக சொத்து வழக்கில் நிதானம் அவசியம். மின்சாதனங்களை கவனமாக கையாளுங்கள். தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும்.

மீனம்: குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் நிம்மதி உண்டு. அலைச்சல் குறையும். பழைய வாகனத்தை விற்று
விட்டு புதிது வாங்குவீர். மனைவிவழி உறவினர்களால் அனுகூலம் உண்டு. பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x