Published : 08 Sep 2023 05:29 AM
Last Updated : 08 Sep 2023 05:29 AM
மேஷம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மிகவாதிகளுடன் சந்திப்பு நிகழும். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பேசிப் பழகவும்.
ரிஷபம்: முகப் பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குழப்பம் நீங்கி, குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர்கள்.
மிதுனம்: வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். அடுத்தவர்களின் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. பணவரவு உண்டு.
கடகம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போகவும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். நண்பர்கள், உறவினர்களுடன் பகைமை வந்து நீங்கும். சாதாரண வேலைக்குக் கூட அதிகமாக அலைய நேரிடும்.
சிம்மம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.
கன்னி: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். பிள்ளைகள் படிப்பு விஷயத்தில் கவனம் தேவை.
துலாம்: மனக்குழப்பங்கள் விலகும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்ட முயற்சிப்பீர்கள்.
விருச்சிகம்: பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உதவி கேட்டு உறவினர், நண்பர்கள் தர்மசங்கடத்துக்கு ஆளாக்குவார்கள். பழைய பிரச்சினைகள் தலைதூக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.
தனுசு: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். முக்கியப் பிரமுகர்களின் நட்பு கிடைக்கும்.
மகரம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். திடீர் பயணம் ஏற்படும்.
கும்பம்:சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல் நலம் சீராக இருக்கும். புதிய தொழில் தொடங்க கடனுதவி கிடைக்கும்.
மீனம்: துடிப்புடன் காணப்படுவீர்கள். தம்பதிக்குள் மகிழ்ச்சியுண்டு. விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். தாயாருடன் கருத்து மோதல் வரக் கூடும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT