Published : 03 Sep 2023 05:34 AM
Last Updated : 03 Sep 2023 05:34 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: கடந்த காலத்தை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் டென்ஷனாவீர்கள். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர் கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

ரிஷபம்: தம்பதிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். சகோதர வகையில் ஆரோக்கியமான விவாதங்கள் வரும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதி கரிக்கும். உறவினர் வருகையால் வீடு களைகட்டும்.

மிதுனம்: உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். வாகன வசதி பெருகும். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் வரும். பிள்ளைகளை அவர்கள் விரும்பிய படிப்பில் சேர்க்கவும்.

கடகம்: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களால் முடிந்தவற்றை செய்து கொடுப்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். புதிய தொழில் தொடங்க முயற்சிப்பீர்கள்.

சிம்மம்: எடுத்த காரியங்களை முடிக்க முடியாமல் அவதிப்பட்ட நிலை, காலை 10.30 மணி முதல் மாறும். தந்தையின் உடல் நிலை சீராகும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். பணவரவு உண்டு.

கன்னி: காலை 10.30 மணி முதல், முன்கோபத்தால் பகை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர். சிறுசிறு அவமானம் ஏற்படக் கூடும். வழக்கு விசாரணை தள்ளிப்போகும்.

துலாம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சர்யப்படுத்துவீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். புதிய வீடு கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

விருச்சிகம்: பிள்ளைகளின் உடல்நிலை சீராக இருக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். அக்கம் - பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லைகள் விலகும். குடும்பப் பிரச்சினைகள், குழப்பங்கள் ஓரளவு தீரும்.

தனுசு: துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அனுசரித்து போவீர்கள். பணவரவு திருப்தி தரும். வழக்கு சாதகமாகும். குடும்பத்துடன் வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

மகரம்: பிள்ளைகளின் அடிமனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துக் கொள்விர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் சந்தோஷம் கிட்டும். மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். பணவரவு உண்டு.

கும்பம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். உங்களை தேடி வந்து சிலர் உதவி கேட்பார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வழக்குகள் உங்களுக்கு சாதகமாக நிறைவடையும். புதிய பதவி கிடைக்கும்.

மீனம்: காலை 10.30 மணி முதல் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். பழைய வாகனத்தை விற்பீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x