Published : 29 Aug 2023 05:40 AM
Last Updated : 29 Aug 2023 05:40 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: உங்களின் நிர்வாகத் திறன் கூடும். பணவரவு உண்டு. பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

ரிஷபம்: எதிலும் உங்கள் கை ஓங்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பழைய வாகனத்தை சீர் செய்வீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

மிதுனம்: அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பணவரவு உண்டு.

கடகம்: பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள். வர வேண்டிய தொகை கைக்கு வரும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பழகவும்.

சிம்மம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பணபலம் உயரும். அரசியலில் செல்வாக்கு கூடும். பிள்ளைகளை அவர்கள் விரும்பும் படிப்பில் சேர்க்க முயற்சி செய்யவும்.

கன்னி: உறவினர்களின் கனிவான விசாரிப்புகள் ஆறுதல் அளிக்கும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையடைவீர்கள். மனைவிவழியில் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். பழைய வழக்கில் வெற்றி கிடைக்கும்.

துலாம்: பழுதான வண்டியை மாற்றுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினை தீரும். புதிய வீடு கட்டுவதற்கு வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

விருச்சிகம்: சவாலான விஷயங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். உங்களின் தனித்திறமை பளிச்சிடும். விஐபிகளின் நட்பு கிடைக்கும். யாரிடமும் பகைமை பாராட்ட வேண்டாம். பிள்ளைகள் உதவிகரமாக இருப்பார்கள்.

தனுசு: பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சொந்த - பந்தங்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

மகரம்: உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை ஒதுக்குவீர்கள். இடம், பொருள் ஏவலறிந்து பேச வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் சாதனையால் பெருமை அடைவீர்கள்.

கும்பம்: வீண் வறட்டு கவுரவத்துக்காக சேமிப்புகளை கரைக்காதீர்கள். வேலைச்சுமை உண்டு. திடீர் பயணங்கள் ஏற்படும். கடன் பிரச்சினைகள் தீரும். புதிய தொழில் தொடங்குவீர்கள். புதிய பதவி, பொறுப்பு தேடி வரும்.

மீனம்: புதிதாக டி.வி. ஃப்ரிட்ஜ், செல்போன் வாங்குவீர்கள். புதியவர்கள் அறிமுகமாவர். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x