Published : 20 Aug 2023 05:21 AM
Last Updated : 20 Aug 2023 05:21 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும்.

ரிஷபம்: முகப் பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையடைவீர்.

மிதுனம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்கள்.

கடகம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். நீண்ட நாள் கழித்து உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும்.

சிம்மம்: மனக்குழப்பங்கள் விலகும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் வந்து போகும்.

கன்னி: சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாக புரிந்து கொள்வார்கள். எனவே இன்று நிதானித்து பேசுங்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.

துலாம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தினரை அனுசரித்துப் போவதால் நன்மை உண்டாகும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். நண்பர்கள் உதவி செய்வர்.

விருச்சிகம்: வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வீண் விவாதம் தவிர்க்கவும்.

தனுசு: உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் நன்மை பிறக்கும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு.

மகரம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். சிந்தனை திறன் அதிகரிக்கும். திருமணம், கிரஹப்பிரவேசம், சீமந்தம் என்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். திட்டமிட்டபடி அயல்நாட்டு பயணம் நடைபெறும்.

கும்பம்: அக்கம் பக்கத்தினரை அனுசரித்துப் போகவும். அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். சாலையை கடக்கும்போது கவனம் தேவை. குடும்பப் பிரச்சினைகளை யாரிடமும் கூறிக் கொண்டிருக்க வேண்டாம்.

மீனம்: துடிப்புடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்த விரிசல் நீங்கி மகிழ்ச்சியுண்டு. விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x