Published : 26 Jul 2023 05:35 AM
Last Updated : 26 Jul 2023 05:35 AM
மேஷம்: அறிஞர்கள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். எதிர்பாராத பண வரவு உண்டு. உங்கள் ரசனைக்கு ஏற்ப வீடு, வாகனம் அமையும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள்.
ரிஷபம்: குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களை சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். கலை பொருட்கள் சேரும்.
மிதுனம்: அழகு, இளமை கூடும். அறக்கட்டளை அல்லது சங்கத்துக்கு உதவுவீர்கள். பிள்ளைகளால் பெருமை யடைவீர்கள். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகனம் செலவு வைக்கும்.
கடகம்: தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் கவுரவிக் கப்படுவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். குறுக்கு வழியில் ஆதாயம் தேடவேண்டாம். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனம் தேவை.
சிம்மம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்களை இனம் கண்டறிவீர்கள்.பணவரவு உண்டு.ஆன்மிக வாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள்.
கன்னி: சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை அடைவீர். உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உற வினர்கள், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்து கொள்வர். பழைய கடன்களில் ஒன்று தீரும்.
துலாம்: சிறு, சிறு அவமானம், ஏமாற்றம் வந்து போகும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். அக்கம் - பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள். பூர்வீக விட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.
விருச்சிகம்: கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். கோயில் கும்பாபிஷேகத்தை எடுத்து நடத்துவீர்கள். அரசு காரியங்கள் தொடர்ந்து இழுபறியாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.
தனுசு: சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். சொந்த - பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்று புது இடம் வாங்குவீர்கள். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள்.
மகரம்: குழப்பம் நீங்கி மனோபலம் அதிகரிக்கும். கடனாக கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். அடகில் இருந்த நகையை மீட்பீர்கள்.
கும்பம்: திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். பழைய சொந்தங்கள் தேடி வரும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் பொறுப்பாக இருப்பார்கள். பணவரவு உண்டு.
மீனம்: அடுத்தவர்கள் விவகாரத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். பண விஷயத்தில் நண்பர்கள், உறவினர்களுடன் பகை உண்டாகும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். எதிலும் அமைதி காக்கவும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT