Published : 25 Jul 2023 05:35 AM
Last Updated : 25 Jul 2023 05:35 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: சகோதரர்களால் பயனடைவீர்கள். மகள், மகனின் கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். புதிதாக ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழியில் மதிப்பு, மரியாதை கூடும்.

ரிஷபம்: அரசால் அனுகூலம் உண்டு. இழுபறி வழக்கில் சாத கமான திருப்பம் வரும். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

மிதுனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளை களின் உயர்கல்வி, வேலை குறித்து யோசிப்பீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். பூர்வீக வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

கடகம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

சிம்மம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

கன்னி: காலை 11மணி முதல் தம்பதிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வர். நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

துலாம்: ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற குழப்பம் இருக்கும். உறவினர்களிடம் வீண் விவாதம் தவிர்க்கவும்.

விருச்சிகம்: தேவையற்ற அலைச்சல் இருக்கும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். பணப் பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்று வாங்க வேண்டி வரும். யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம்.

தனுசு: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிடைக்கும். பெற்றோர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். பணவரவு உண்டு.

மகரம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புதிய தொழில் ஏற்றம்தரும். சொந்த ஊரில் முதல் மரியாதை கிடைக்கும்.

கும்பம்: காலை 11மணி முதல் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதிய பதவி தேடி வரும்.

மீனம்: காலை 11மணி முதல் குடும்ப விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அநாவசியமாக யாருக்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். நவீன மின்னணு சாதனம் வாங்குவீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x