Published : 23 Jul 2023 05:28 AM
Last Updated : 23 Jul 2023 05:28 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

ரிஷபம்: உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று குலதெய்வ கோயிலில் நிறைவேற்றுவீர். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும்.

மிதுனம்: புதிய கோணத்தில் சிந்திப்பீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்.

கடகம்: தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். சுப நிகழ்ச்சிகளாலும், விருந்தினர்களின் வருகையாலும் வீடு களை கட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். புதிய தொழில் தொடங்க முயற்சிப்பீர்.

சிம்மம்: மனைவிவழியில் மதிப்பு, மரியாதை கூடும். அழகு, இளமை கூடும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தாய், தந்தை ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி: பழைய பிரச்சினைகள் தலை தூக்கும். பொறுமையை இழப்பீர்கள். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமல் போகும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பழகவும்.

துலாம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். லேசாக தலை வலிக்கும். பண விஷயத்தில் கவனமாக இருங்கள். அநாவசிய செலவுகளை தவிர்க்கவும். பிள்ளைகளை அவர்கள் விரும்பும் படிப்பில் சேர்க்கவும்.

விருச்சிகம்: குடும்பத்தினர் உதவிகரமாக இருப்பர். வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர். திருமண பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் உண்டு.

தனுசு: உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். புதிய வாகனம் வாங்க திட்டமிடுவீர்.

மகரம்: பிரச்சினைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர். புண்ணிய ஸ்தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். கலைப் பொருட்கள் சேரும்.

கும்பம்: உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்க வேண்டும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வர வேண்டிய பணத்தை போராடி பெறுவீர்கள். புதிய பதவிகளும், பொறுப்புகளும் தேடி வரும்.

மீனம்: சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புது நட்புமலரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறுவீர்கள். அக்கம் பக்கத்தினருடன் வீண் விவாதம் தவிர்க்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x