Published : 16 Jul 2023 06:30 AM
Last Updated : 16 Jul 2023 06:30 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எதிலும் முன்னேற்றம் உண்டு. தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்த - பந்தங்களுடன் இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்து பிரச்சினை முடிவுக்கு வரும்.

ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உங்களுடைய ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

மிதுனம்: தாயாருடன் மனத்தாங்கல் வரும். சிறுசிறு வாகன விபத்துகள் வரக்கூடும். மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். பூர்வீக வீட்டை விற்றுவிட்டு புதிது வாங்க திட்டமிடுவீர்கள். எதிலும் கவனம் தேவை.

கடகம்: சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படாதீர். எதிர்பார்த்த தொகை எல்லாம் தாமதமாக வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த பாருங்கள். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகவும்.

சிம்மம்: தொட்ட காரியங்கள் அனைத்தும் தடையின்றி நடை பெறும். தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வாகன வசதி பெருகும். வீடு கட்ட கட்டிட அனுமதி கிடைக்கும். பழைய கடன்களில் ஒன்று தீர வழி ஏற்படும்.

கன்னி: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும்.

துலாம்: தந்தைவழியில் உதவிகள் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். புண்ணிய காரியங்கள், சுப காரியங்களுக்கு எல்லாம் தலைமை தாங்குவீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சியமாகும்.

விருச்சிகம்: வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் கருத்து மோதல்களும், பிரச்சினைகளும் வரக்கூடும். பிள்ளைகள் விஷயத்திலும் கவனமாக இருக்கவும்.

தனுசு: பழுதாகியிருந்த வாகனம் சரியாகும். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நிகழும். மகள், மகனின் கல்யாணப் பேச்சுவார்த்தை கைகூடும். நீண்ட நாளாக சந்திக்காத பழைய நண்பர்களை சந்திப்பீர்கள்.

மகரம்: மனைவிவழியில் சில உதவிகள் கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் நிறைவேறும். பிள்ளைகளால் பெருமை உண்டு. நண்பர்கள் ஆதரவாக இருப்பர்.

கும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அவர்கள் மூலமாக சில உதவிகள் கிட்டும். தெய்வீக சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் கூடும். பணவரவு திருப்தி தரும்.

மீனம்: ஆன்மிக ஆற்றல் கிட்டும். காலத்தை உணரும் சக்தி உங்களுக்கு ஓரளவு கிடைக்கும். மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். வெளிவட்டாரத்தில் எல்லோரும் மதிப்பார்கள். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x