Published : 03 Jul 2023 06:25 AM
Last Updated : 03 Jul 2023 06:25 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பல வகையிலும் பண வரவு அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். கடன் பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர்கள். முகப்பொலிவு, ஆரோக்கியம் கூடும்.

ரிஷபம்: செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். அவ்வப்போது பணப் பற்றாக்குறை வந்தாலும் சமாளிப்பீர்கள். நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவியை செய்வீர்கள்.

மிதுனம்: அச்சம், கவலை, மன இறுக்கம் குறையும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பேச்சில் நிதானம் தேவை.

கடகம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை கிடைக்கும். கறாராக பேசி காரியம் சாதிப்பீர்கள். வீண் செலவுகளை குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள்.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும்.

கன்னி: மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் தென்படும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

துலாம்: புதியவர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வருங்கால வளர்ச்சிக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும்.

விருச்சிகம்: எதிர்பார்த்த தொகை கைக்கு வந்துசேரும். குடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை அனைவரும் ஏற்று நடப்பார்கள். அக்கம் பக்கத்தினரால் அனுகூலம் உண்டு.

தனுசு: பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். உடல்நலத்தில் அதிக அக்கறை காட்டுவது நல்லது. இழுபறியாக இருந்த சொத்து பிரச்சினையில் சுமுகமான தீர்வு கிடைக்கும்.

மகரம்: தவிர்க்க முடியாத செலவுகள், பயணங்கள் வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சிபாரிசு செய்வது, ஜாமீன் கையெழுத்திடுவது வேண்டாம்.

கும்பம்: சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். நவீனரக வாகனங்கள், மின்னணு, மின்சார சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள்.

மீனம்: கடின உழைப்பால் சாதனை படைப்பீர்கள். நீண்ட காலமாக அலைக்கழித்த மனப் போராட்டங்கள் ஓயும். உங்கள் சமயோசிதமான பேச்சால், தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x