Published : 02 Jul 2023 06:44 AM
Last Updated : 02 Jul 2023 06:44 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: அவ்வப்போது உணர்ச்சி வசப்படுவீர்கள். எதிலும் ஒரு பிடிப்பற்ற போக்கு, செரிமானக் கோளாறு வந்து
செல்லும். மாலை முதல் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. உறவினர், நண்பர் மத்தியில் மதிப்பு கூடும்.

ரிஷபம்: பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். மாலை முதல் எதிலும் எச்சரிக்கை தேவை. பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர். பணவரவு உண்டு.

மிதுனம்: உங்களின் நிர்வாகத் திறமை, ஆளுமைத் திறன் அதிகரிக்கும். விஐபிகள் அறிமுகமாவார்கள். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அனைவரிடமும் இணக்கமாக இருப்பது மேன்மை தரும்.

கடகம்: எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் மனோபலமும், வலிமையும்
உண்டாகும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினருடன் மோதல் ஏற்படலாம்.

சிம்மம்: எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் மனோபலமும், வலிமையும்
உண்டாகும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினருடன் மோதல் ஏற்படலாம்.

கன்னி: உங்கள் கை ஓங்கும். மனஉறுதி அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் மரியாதை கிடைக்கும். புதிய யோசனைகள் உதயமாகும். யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி தருவதைத் தவிர்க்கவும்.

துலாம்: தடைகள் பல வந்தாலும் தளராமல் சாதிக்க முற்படுவீர்கள். எடுத்த வேலையை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் கவனம் தேவை.

விருச்சிகம்: உங்கள் திறமை மீது அவ்வப்போது சந்தேகம் வரும். தெளிவான முடிவு எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பது நல்லது. மாலை முதல் பிரச்சினை தீரும்.

தனுசு: மனஇறுக்கம் வந்து செல்லும். நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவெடுங்கள். தேவையற்ற விவாதங்களைத் தவிக்கவும். பணவரவு உண்டு.

மகரம்: எதிர்ப்புகளை எளிதாக சமாளிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். விஐபிகள் அறிமுகமாவர். ஷேர் மூலம் பணம் வரும். பிள்ளைகளின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

கும்பம்: கடன் பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு கட்ட பிளான் அப்ரூவலாகி வரும். கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும். உறவினர் வருகை உண்டு.

மீனம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். தொழிலதிபர்கள் அறிமுகமாவர். தடைபட்டிருந்த வீடு கட்டும் வேலையை மீண்டும் தொடர்வீர்கள். உடல் நலனில் அக்கறை செலுத்தவும். எதிலும் நிதானமாக செயல்படவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x