Published : 01 Jul 2023 05:12 AM
Last Updated : 01 Jul 2023 05:12 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: அலைச்சலும், செலவுகளும் இருக்கும். நீங்கள் நல்லது சொல்லப் போய் சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள். உடல் நலத்திலும் கவனம் தேவை. பால்ய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.

ரிஷபம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். அழகு, இளமை கூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

மிதுனம்: வேற்றுமொழி பேசுபவர்கள், பிற மதத்தினரால் திடீர் திருப்பம் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். பழைய கடன்களில் ஒன்று தீரும்.

கடகம்: பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பணவரவு திருப்தி தரும்.

சிம்மம்: அஉங்கள் செயலில் வேகம் கூடும். பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

கன்னி: விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். மனஇறுக்கம் நீங்கும். விஐபிகள் மத்தியில் செல்வாக்கு கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நீண்ட நாள் பேசாத உறவினர் வலிய வந்து பேசுவார். பணவரவு உண்டு.

துலாம்: தடைபட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். புதிய வீடு கட்ட திட்டமிடுவீர்கள். எளிதில் வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

விருச்சிகம்: மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். கோயில் முக்கிய நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பழைய கடன் சுமையை நினைத்து அவ்வப்போது நிம்மதி இழப்பீர்கள். உடல்நலனில் கவனம் தேவை.

தனுசு: திடீர் பயணங்கள், ஆழ்ந்த உறக்கமின்மை வந்து செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வந்து நீங்கும். இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி கிடைக்கும்.

மகரம்: பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர். ஷேர் மூலம் பணம் வரும். முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். குடும்ப விஷயங்களை யாரிடமும் கூறிக் கொண்டிருக்காதீர்கள்.

கும்பம்: உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். முக்கிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.

மீனம்: நினைத்த காரியம் நிறைவேறும். அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பழைய வாகனம் செலவு வைக்கும். வீண் வாதங்களைத் தவிர்க்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x