Published : 18 Apr 2023 05:35 AM
Last Updated : 18 Apr 2023 05:35 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: கொஞ்சம் அலைச்சல் இருக்கும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. சில காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பூர்வீக நிலம், வீடு தொடர்பான பிரச்சினையில் நல்ல தீர்வு காணப்படும்.

ரிஷபம்: வீட்டுக்குத் தேவையான எலக்ட்ரானிக்ஸ் சாதனங் களை வாங்குவீர்கள். உறவினர்களின் ஆதரவு உண்டு. தாய்வழி உறவினர்களுடன் சுமுகமான நிலை காணப் படும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

மிதுனம்: மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். அரசாங்க அதிகாரி களின் ஆலோசனைப்படி சொத்து பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். உயரதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்று உயர் பதவிகளை அடைவீர்கள்.

கடகம்: தடுமாறிக் கொண்டிருந்த சில காரியங்கள் முழுமை யடையும். வி.ஐ.பிகளின் ஆதரவு கிட்டும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிணக்குகள் மாறும். பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும்.

சிம்மம்: வீண் அலைச்சல், பணத் தட்டுப்பாடு வரக்கூடும். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். மருத்துவச் செலவுகள், வீண்பழிகள் வரக்கூடும். ஆன்மிக வாதிகளுடனான சந்திப்பு ஏற்படும்.

கன்னி: பால்ய நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். சேமிக்கும் அளவுக்கு பணவரவு உண்டு. பிள்ளைகளுக்கு புதிய ஆடை ஆபரணங்களை வாங்கித் தருவீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்.

துலாம்: பிரபலங்களின் நட்பு கிட்டும். சகோதர, சகோதரிகள் உங்களை புரிந்து கொள்வார்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். நீண்ட நாளாக பேசாத உறவினர் வந்து பேசுவார். கலை பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: எதிர்பார்த்திருந்த வகையில் உதவிகள் கிடைக்கும். வீண் குழப்பங்கள் நீங்கும். வி.ஐ.பிகளுக்கு நெருக்க மாவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள்.

தனுசு: அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப் படும். பால்ய நண்பர்கள் தேடி வருவார்கள். அண்டை அயலாருடன் அளவாகப் பேசப் பாருங்கள். உறவினர்களுடன் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.

மகரம்: நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வருமென எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மூத்த சகோதர வகையில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.

கும்பம்: புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். நட்பு வட்டாரம் விரியும். தெளிவான முடிவுகளை எடுப்பீர் கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதிய பதவி, பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.

மீனம்: எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத் தாருடன் இணக்கமாகச் செல்லவும். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். பழைய கடன் களில் ஒன்று தீர வழி கிடைக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x