Published : 17 Nov 2022 02:40 AM
Last Updated : 17 Nov 2022 02:40 AM

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.17 - 23 

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் ராகு - தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - சப்தம ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் சனி - விரைய ஸ்தானத்தில் குரு என கிரகநிலை இருக்கிறது.

பலன்: இந்த வாரம் நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். புத்திசாதூரியத்தால் எந்த தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். எந்த ஒரு பிரச்சினையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். தொழில் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். அரசியல்வாதிகள் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

பரிகாரம்: குலதெய்வத்தை பூஜித்து வணங்க குடும்ப பிரச்சினை தீரும். கடன் கட்டுக்குள் இருக்கும்.

***********

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்) கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் குரு - விரைய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை இருக்கிறது.

பலன்: இந்த வாரம் மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் தொல்லை தலைதூக்கலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, இடமாற்றம், அலைச்சல் போன்றவை இருக்கக்கூடும். தடைபட்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு எதிலும் தேவையற்ற வீண் கவலை உண்டாகும்.

கலைத்துறையினருக்கு எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். அரசியல்வாதிகளுக்கு மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். மாணவர்கள் மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். சக மாணவர்களுடன் நிதானமாக பழகுவது நல்லது.

பரிகாரம்: மகாலட்சுமியை பூஜிக்க பணபிரச்சினை நீங்கும். மனநிம்மதி உண்டாகும்.

***********

மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்) கிரகநிலை - ராசியில் செவ்வாய்(வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை இருக்கிறது.

பலன்: இந்த வாரம் பணவரவு இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சுணக்க நிலை நீங்கும். வீண்பழி மறையும். சில்லறை சண்டைகள் சரியாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கலாம். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சேமிப்புகள் உயரும்.

கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். அரசியல்வாதிகள் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: பெருமாளுக்கு துளசியை அர்ப்பணித்து தரிசித்து அர்ச்சனை செய்து வழிபட குழப்பம் நீங்கி மனநிம்மதி கிடைக்கும். சொத்து பிரச்சினை தீரும்.

அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ நவ.17-23

> மேஷம், ரிஷபம், மிதுனம்

> கடகம், சிம்மம், கன்னி

> துலாம், விருச்சிகம், தனுசு

> மகரம், கும்பம், மீனம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x