Published : 13 May 2022 07:09 PM
Last Updated : 13 May 2022 07:09 PM

மகரம், கும்பம், மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! மே 18ம் தேதி வரை

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்) - ராசியில் சனி - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), ராகு - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகநிலை இருக்கிறது. இம்மாதம் 15ம் தேதி - சூர்யன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 17ம் தேதி - செவ்வாய் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் உடற்சோர்வு மனச் சோர்வு வரலாம். அனைத்தையும் தவிடு பொடியாக்குவீர்கள். மிகவும் வேண்டியவரை பிரிய நேரிடும். கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லது. தாய், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.

நண்பர்கள் உறவினர்களிடம் கவனமாகப் பேசிப் பழகுவது நல்லது. எந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் விட்டுக் கொடுத்து செல்வது சிறந்தது. தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் எதிர்பார்த்த லாபம் அதிகமாகும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் இருந்த தடைகள் உடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். எதிர்நோக்கியியிருந்த பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. கலைத்துறையினருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வந்து சேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்துச் செல்வது நல்லது.

பரிகாரம்: சனிக்கிழமையில் சனி பகவானை வணங்கி வர உடல் ஆரோக்கியமடையும். வீண் அலைச்சல் குறையும். கடினமான பணிகள் எளிதாக முடியும்.
***************************


கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) - ராசியில் செவ்வாய், சுக்கிரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), ராகு - பாக்கிய ஸ்தானத்தில் கேது - விரய ஸ்தானத்தில் சனி என கிரகநிலை இருக்கிறது. இம்மாதம் 15ம் தேதி - சூர்யன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 17ம் தேதி - செவ்வாய் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் எல்லா வகையிலும் நன்மை உண்டாக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்கப் பெறுவீர்கள். குறிக்கோளற்ற பயணங்கள் உண்டாகும். விழிப்புடன் இருப்பது நல்லது. சுபச் செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன், மனைவிக்கிடையே பாசம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த மன பிணக்குகள் மறையும். சந்தோஷ சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் கல்விக்கான செலவு அதிகரிக்கும். அத்துடன் தேவையானவற்றையும் வாங்கித் தருவீர்கள். புதிய வீடு மனை வாங்குவதற்கான வாய்ப்பு தானாக அமையும்.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் சுமுகமாகச் செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளைச் செய்யவேண்டி இருக்கும். வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட தோன்றலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. பெண்களுக்கு அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு வேலைகளில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். அரசியலில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களைப் படிப்பது அவசியம். வீண் விவகாரங்களை விட்டு விலகுவது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீகுருவாயூரப்பனை வணங்கி வர எல்லா பிரச்சினைகளும் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும்.
*********************************
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) - ராசியில் குரு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி - விரய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் என கிரகநிலை இருக்கிறது. இம்மாதம் 15ம் தேதி - சூர்யன் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 17ம் தேதி - செவ்வாய் ராசிக்கு மாறுகிறார்.

இந்த வாரம் அதி முக்கிய காரியங்களை சுபமாக நடத்திக் கொள்வீர்கள். மனோதிடம் அதிகரிக்கும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். வீடு மனை சார்ந்த வழக்குகளில் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷத்தைத் தரும்.

வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி திருப்தியடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். லாபம் அதிகாரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாகும். வேலைப் பளு குறையும். பெண்களுக்கு மனதில் துணிச்சல் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். அரசியலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தன லாபம் அதிகரிக்கும். சிறப்பான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் சேரும். மாணவர்களுக்கு பாடங்களைப் படிப்பது வேகம் பெறும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கும். மன நிம்மதி உண்டாகும்.
**************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x