

கடகம்: கிரக நிலை: சுக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் செவ், சுக், சனி - அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரக மாற்றங்கள்: 31-03-2022 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
03-04-2022 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
06-04-2022 அன்று செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
இந்த வாரம் வீண் அலைச்சல் நீங்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் எண்ணம் தோன்றும். அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. பணம் வரும் வாய்ப்பு உள்ளது. தொழில், வியாபாரம் விரிவுபடுத்துவது தொடர்பான திட்டங்கள் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்களால் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் கூறுவதை மறுத்து பேசாமல் அனுசரித்துச் செல்வது நன்மையைத் தரும்.
குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தெளிவான முடிவுகள் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு எதையும் புதுமையாகச் செய்து வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு காரியங்கள் துரிதமாகும். புதிய பதவிகள் தேடிவரும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறுவதைக் கேட்டு அதன்படி நடப்பதும், பாடங்களில் இருக்கும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெரிந்து கொள்வதும் வெற்றிக்கு உதவும்.
பரிகாரம்: குருபகவானுக்கு கொண்டைக்கடலை மாலை அர்ப்பணித்து வணங்கி வர செல்வம் சேரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
******************
சிம்மம்: கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ், சுக், சனி - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரக மாற்றங்கள்: 31-03-2022 அன்று சுக்ர பகவான் ரண ருண ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
03-04-2022 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
06-04-2022 அன்று செவ்வாய் பகவான் ரண ருண ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
இந்த வாரம் உங்கள் பேச்சில் வேகம் இருக்கும். எல்லாவிதத்திலும் நன்மை உண்டாகும். மனோ தைரியம் வரும். எதையும் துணிச்சலாகச் செய்து முடிப்பீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அந்நிய நபர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அதிக உழைப்பின் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவார்கள்.
பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் கூடுதல் உழைப்பின் மூலம் செய்து முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல் நல்ல தகவலாக இருக்கும். அவசரத்தை தவிர்ப்பது நல்லது. சகோதரர் வழியில் உதவியை எதிர்பார்க்கலாம். பெண்களுக்கு எதிர்ப்புகள் நீங்கும். அரசியல்வாதிகளுக்கு நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். தேவையான உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்: நவக்கிரகங்களை தீபம் ஏற்றி வழிபட்டு வர எதிர்ப்புகள் விலகும். பிரச்சினைகளில் சுமுக முடிவு உண்டாகும். தைரியம் கூடும்.
****************
கன்னி: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் செவ், சுக், சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரக மாற்றங்கள்: 31-03-2022 அன்று சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
03-04-2022 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
06-04-2022 அன்று செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
இந்த வாரம் வாக்கு வன்மையால் எதையும் சாதகமாக செய்து முடிப்பீர்கள். திறமை அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். ராசிநாதன் புதனின் சார பலம் பலவித நற்பலன்களை அளிக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுர்யமான பேச்சினால் எதிலும் லாபம் காண்பார்கள். வர்த்தகத் திறமை அதிகரிக்கும்.
பணவரத்து திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையால் முன்னேற்றமடைவார்கள். இழுபறியாக இருந்த வேலையை துணிச்சலாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது நல்லது. விருந்தினர் வருகை இருக்கும். குடும்ப பிரச்சினைகளில் சாதகமான முடிவே உண்டாகும். பெண்களுக்கு துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின் போதும் கவனம் தேவை. கலைத்துறையினர் எந்தக் காரியத்திலும் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். மாணவர்களுக்கு திறமையால் முன்னேற்றம் உண்டாகும். கஷ்டமான பாடங்களையும் துணிச்சலாக படித்து முடிப்பீர்கள். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.
பரிகாரம்: நவக்கிரகத்தில் புதனை வணங்க குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பணக் கஷ்டம் குறையும்.
******************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல |