ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்; உத்திரம் நட்சத்திர அன்பர்களே! பண வரவு; வாகன யோகம்; வேலையில் தவிப்பு!

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்; உத்திரம் நட்சத்திர அன்பர்களே! பண வரவு; வாகன யோகம்; வேலையில் தவிப்பு!
Updated on
1 min read


- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


உத்திரம்:


கிரகநிலை:
ராகு பகவான் உங்களுடைய பத்தொன்பதாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து ஒன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
கேது பகவான் உங்களுடைய ஐந்தாவது நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

இந்த பெயர்ச்சியில் எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக முயற்சி செய்த காரியங்கள் வெற்றியைத் தரும். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை. தொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும்.

உழைப்பு அதிகரிக்கும். உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் இல்லாமல் போகலாம். குடும்பத்தில் உறவினருடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையில் இடைவெளி குறையும். உறவினர்கள் - நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பெண்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகும்.

கலைத்துறையினருக்கு திடீர் செலவுகள் ஏற்படலாம். அரசியல் துறையினருக்கு எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. மாணவர்களுக்கு கல்விக்கான பணிகளில் தாமதம் உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும்.


பரிகாரம்: சரஸ்வதி தேவியை வணங்க எதிர்பார்த்த காரிய அனுகூலம் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பிரச்சினை தீரும்.
மதிப்பெண்கள்: 74% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
****

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in