ராகு - கேது பெயர்ச்சி; திருவாதிரை நட்சத்திர அன்பர்களே! பண வரவு; வேலையில் முன்னேற்றம்; குடும்பத்தில் மகிழ்ச்சி!

ராகு - கேது பெயர்ச்சி; திருவாதிரை நட்சத்திர அன்பர்களே! பண வரவு; வேலையில் முன்னேற்றம்; குடும்பத்தில் மகிழ்ச்சி!
Updated on
1 min read

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

திருவாதிரை:


கிரகநிலை:


ராகு பகவான் உங்களுடைய இருபத்தி ஐந்தாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து ஒன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
கேது பகவான் உங்களுடைய பதினொன்றாவது நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

இந்தப் பெயர்ச்சியில் எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் செய்யத் தயங்கும் வேலையைச் செய்து முடித்து பாராட்டு கிடைக்கப் பெறுவீர்கள். எண்ணியபடி செயல்களைச் செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள்.

பெண்கள் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு பணவரவு அதிகமாகும். அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக முடிய கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும்.


பரிகாரம்: நடராஜ பெருமானை அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கி வாழ்வில் இன்பம் உண்டாகும்.


மதிப்பெண்கள்: 82% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
*******

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in