

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
இந்த வாரம் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சாதகமாக முடியும். துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் நன்மைகளைத் தரும் காலகட்டமாக அமையும். மனதில் மகிழ்ச்சியான எண்ணங்கள் வரும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நட்பு, உறவினர்களிடம் சுமுகமான நிலை நீடிக்கும். உல்லாசப் பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். வாகனங்கள் வாங்குவதில் இருந்த தடை நீங்கும். திருமண முயற்சிகள் கைகூடும். வழக்குகளில் சுமுக முடிவுகள் வந்து சேரும். தொழிலில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். தாய் - தாய் வழி உறவினர்கள் மூலம் அடிக்கடி மனக்கவலை ஏற்படும். காதல் விவகாரங்களில் தகராறு உண்டாகும். பெண்களுக்கு மனக்குறைகள் நீங்கி மனதில் நம்பிக்கை உண்டாகும். கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.
பரிகாரம்: புதன்கிழமை அன்று பெருமாள் ஆலயத்திற்குச் சென்று துளசி அர்ப்பணித்து வழிபட மனதில் இருந்த சஞ்சலம் நீங்கும். சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும்.
******************
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். புத்திசாதுர்யம் கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வழக்குகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். சக பணியாளர்கள் கை கொடுப்பார்கள். மேலிடத்தின் அனுசரனையான பார்வை உங்கள் மேல் விழும்.
குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை அகலும். பெண்களுக்கு புத்தி சாதுர்யம் அதிகரிக்கும். பிரச்சினைகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களைப் படிப்பீர்கள். கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வர மனதில் இருந்த கவலைகள் நீங்கும். சுப நிகழ்ச்சிகளில் இருந்து வந்த தடைகள் அகலும்.
***************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல |