

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
இந்த வாரம் சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பிடிக்கும். வீண் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் இருந்த தடைகள் அகலும். புதிய வீடு வாகனச் சேர்க்கை ஏற்படும். பணத்தேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சாதுர்யமாக சமாளித்து முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது.
குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உறவினர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். குழந்தைச் செலவம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி வரும். பெண்களுக்கு தொல்லைகளில் சிக்காமல் இருக்க கவனமாக செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மெத்தனப் போக்கு காணப்படும். பெற்றோர் ஆசிரியர்கள் ஆதரவாக இருப்பார்கள். கலைத்துறையினருக்கு ஏற்றமான காலமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் இருக்கும் மனத்தாங்கல்கள் அகலும்.
பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் முருகன் ஆலயத்திற்குச் சென்று அரளிப்பூ அர்ப்பணித்து வர இடர்பாடுகள் அகலும்.
****************************************************
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)
இந்த வாரம் சுகம் அதிகரிக்கும். வீண் செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் வரவு இருக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல் அதிருப்தி உண்டாகலாம். கனவுகளால் தொல்லை ஏற்படலாம். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த கடன் சுமை நீங்கும். பங்குதார்களுக்குள் இருந்து வந்த வேற்றுமை அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும்.
குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகலாம். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். பெண்களுக்கு மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். மாணவர்கள் கல்வியைத் தவிர மற்றவைகளில் கவனத்தை சிதற விடலாம். கலைத்துறையினருக்கு பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். அரசியல்வாதிகள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். மேலிடத்தின் கருணை கிடைக்கும்.
பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்தில் இருக்கும் தாயாரை வணங்கி வர துன்பங்கள் விலகும். மனநிம்மதி குடும்பத்தில் குதூகலம் ஆகியன உண்டாகும்.
***************************************************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |