

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
இந்த வாரம் செலவு அதிகரிக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படலாம். அடுத்தவருக்கு உதவப்போய் வீண் பிரச்சினையில் சிக்கிக் கொள்ள நேரலாம். புதிய நட்பு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் மெத்தனப் போக்கு காணப்படும். தொழில் தொடர் பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது வியாபார வெற்றிக்கு உதவும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு சரியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்படலாம். உங்கள் செயல்களை குடும்பத்தில் உள்ளவர்கள் குற்றம் சொல்லலாம். எனவே வாக்குவாதத்தில் ஈடுபடாமல் கண்டும் காணாமல் செல்வது நன்மை தரும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்கள் எண்ணப்படி காரியங்களை செய்து முடிக்க சூழ்நிலை ஏற்படும். கலைத்துறையினர் செலவுகளைக் குறைக்க திட்டமிடுவது நல்லது. அரசியல்வாதிகளுக்கு கவுரவம் உயரும். மாணவர்களுக்கு கல்வியில் காணப்பட்ட மெத்தனப் போக்கு நீங்கி சுறுசுறுப்பாக பாடங்களைப் படிப்பீர்கள். பிடிவாதத்தை விடுவது நன்மை தரும்..
பரிகாரம்: நடராஜருக்கு தீபம் ஏற்றி வணங்கி வருவது புத்தி சாதுர்யத்தை தரும். சிக்கலான பிரச்சினைகளையும் எளிதாக தீர்ப்பீர்கள்.
*****************
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்):
இந்த வாரம் ஏதாவது ஒருவகையில் மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாதாரணமாக பேசப்போக அது சண்டையாக மாறலாம். வேளை தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபார விரிவாக்கம் செய்யத் தேவையான பண உதவியும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகமாகும். உத்தியோக மாற்றம் ஏற்படலாம்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வருகை இருக்கும். திருமணம் போன்ற சுப காரியம் நடக்கும். நிலம், வீடு மூலம் லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுவையான உணவு கிடைக்கும். மனோ பலம் கூடும். பெண்களுக்கு:நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் அகலும். அரசியல்வாதிகளுக்கு பணவரத்து கூடும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும். கடினமான வேலைகளையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும்.
பரிகாரம்: அம்மனை வழிபட்டு வர எல்லா பிரச்சினைகளிலும் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
****************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |