Published : 20 Jan 2022 03:49 PM
Last Updated : 20 Jan 2022 03:49 PM

சிம்மம், கன்னி  ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! ஜனவரி 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


சிம்மம்:


சிறப்பான குடும்ப சூழ்நிலையை விரும்பும் சிம்ம ராசி அன்பர்களே!


இந்த வாரம் பிறருக்கு கடன் கொடுக்கவும் வேண்டாம்; ஜாமீன் கையெழுத்திடவும் வேண்டாம். அதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். தாயார் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருந்தால் இப்போது சரியாகிவிடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்பு கிடைக்கப் பெறுவார்கள். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். அலுவலகம் மூலம் வாகனம் கிடைக்கலாம். என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம். தொழில்துறையினருக்கு சக பாகஸ்தர்களினால் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவை பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாது. விஸ்தரிப்பு திட்டங்களில் இந்த வாரம் இறங்க வேண்டாம். வியாபாரிகள் புதிய முயற்சிகள் எதிலும் இந்தவாரம் இறங்க வேண்டாம். பொறுமை அவசியம்.


குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை காணப்படும். அதற்கு காரணம் வீட்டில் ஏற்படும் சண்டை சச்சரவுகளும் எதிர்பாராத ஏமாற்றங்களுமே ஆகும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். செலவுகள் ஏற்பட்டாலும் அதைச் சமாளித்து விட முடியும். வாடகை வீட்டிலிருக்கும் அன்பர்கள் சிலர் இப்போது வேறு வீடு மாற வேண்டியிருக்கும். மாணவமணிகள் விடுமுறை நாட்களில் அதிகநேரம் வெயிலில் விளையாட வேண்டாம். ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. தேவையற்ற விஷயங்களில் மனதை அலைய விட வேண்டாம். இந்த வாரம் ஏதாவது நற் பணிகளில் ஈடுபடுவீர்கள். குடும்ப நிர்வாகத்தை கவனித்து வரும் பெண்மணிகளுக்கு சுமாரான வாரம் இது. வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகளும் அலுவலகத்தில் முன்னேற்றம் எதையும் இந்த வாரம் எதிர்பார்க்க முடியாது. கவனமாக இருக்கவும்.


பரிகாரம்: சிவாலயத்திற்கு சென்று நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுங்கள்.
*************************


கன்னி:


பெரியோர் ஆசியும் மகான்களின் தரிசனமும் கிடைக்கப் பெறும் கன்னி ராசி அன்பர்களே!


இந்த வாரம் வெளிநாடுகளில் வசித்து வரும் உறவினர்கள் இப்போது தங்கள் இல்லத்திற்கு வந்து செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.தாயாரின் உடல் நலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து வருவது நல்லது. பணப் பொறுப்புகளில் உள்ளவர்கள் கூடுதல் கவனத்தை செலுத்தி வருவது அவசியம்.எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வரும்.


தொழிலில் புதிய விஸ்தரிப்பு திட்டங்களில் தடைகள் ஏற்படக்கூடும். ஆனாலும் தொழில் பாதிக்கப்படாது. தொழில் துறையினருக்கு நிலுவையிலிருந்த பணம் இப்போது கைக்கு கிடைப்பது சந்தோஷத்தை தரும். குடும்பத்தில் பண வரவிற்கு குறைவே இருக்காது. சென்ற வாரம் ஏற்பட்ட செலவுகள் எதுவும் இந்த வாரம் இருக்காது. குடும்ப ரீதியாகவோ அல்லது தொழில் சம்பந்தமாகவோ முக்கிய முடிவுகள் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அவற்றை வாரத்தின் பிற்பகுதியில் எடுக்கலாம். சகோதரருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்தால் இப்போது சரியாகிவிடும். மாணவமணிகள் தாங்கள் சிரமப்படும் தருணத்தில் சக மாணவர்களிடம் உதவி கிடைப்பது மன ஆறுதலை அளிக்கும்.

விளையாட்டுப் போட்டிகளுக்குள் இந்த வாரம் நீங்கள் செல்ல வேண்டாம். பெண்களுக்கு உற்சாகமான வாரம் இது. வேலைக்குச் சென்று வரும் பெண்கள் அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவை எதிர்பார்க்க முடியாது. அலுவலகத்தில் கடின உழைப்பு ஏற்படும்.


பரிகாரம்: புதன் கிழமைகளில் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
****************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x