Published : 20 Jan 2022 12:50 PM
Last Updated : 20 Jan 2022 12:50 PM

மேஷம், ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! ஜனவரி 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம்:


மனதில் நிம்மதி வேண்டி தவிக்கும் மேஷ ராசி அன்பர்களே!


இந்த வாரம் குடும்ப வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. இதனால் பொருளாதார நிலையும் சுமாராக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரியிடம் நற்பெயர் கிடைக்கும். இதுநாள்வரை தங்களுக்கு தடைப்பட்டிருந்த பதவி உயர்வு இப்போது கிடைப்பதற்கு சிறந்த சாத்தியக்கூறு உள்ளது. அதனால் மனதில் நிம்மதி ஏற்படும். சக பணியாளர்கள் உங்களைக் கண்டு பொறாமைப் படுவார்கள். தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின்போது மிகவும் நிதானமாகப் பேசுவது நன்மை தரும்.


எதிர்பார்த்த பணம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். குடும்பச் சூழ்நிலை ஓரளவே மனநிம்மதியைத் தரும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது. அவர்களிடையே பரஸ்பர அந்நியோன்யம் அதிகரித்து காணப்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவீர்கள். உற்றார் உறவினர் தங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். இதுவரை தடைப்பட்டுவந்த திருமணம் இப்போது நடக்கும்.


நீதிமன்ற வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். பெண்கள் அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களைச் செய்து வெற்றி பெறுவார்கள். புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு மற்றும் பொழுது போக்குகளில் ஆர்வம் உண்டாகும்.


பரிகாரம்: தினமும் முருகப்பெருமானை வணங்கி கந்தர் அனுபூதி சொல்லி வாருங்கள்.
********************


ரிஷபம்:


என்றைக்குமே குடும்பத்திற்காக உழைக்கும் ரிஷப ராசி அன்பர்களே!


இந்த வாரம் குடும்ப வருமானம் நல்லபடி இருக்கும். இருப்பினும் செலவுகள் இந்த வாரம் சற்று அதிகரித்து காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கடின உழைப்பு ஏற்படும். தற்போது கல்லூரிப் படிப்பை முடித்து உள்ளவர்கள் கடுமையாக முயற்சித்தால் மட்டுமே வேலை கிடைக்கும். நேரத்திற்கு உணவருந்த முடியாமல் கூட போகலாம். தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும். உங்களுக்குக் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை உயரச் செய்வார்கள்.
குடும்பத்தில் குழந்தைகள் கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு நீங்கள் செலவு செய்யவேண்டியிருக்கும். உறவினர்களுக்கும் அல்லது நண்பர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டால் அவற்றை முன்னின்று தீர்த்து வைப்பீர்கள். கணவன் மனைவியிடையே கருத்து ஒற்றுமை ஏற்படக்கூடும்.

நீதிமன்றத்தில் தங்கள் மீது வழக்குகள் ஏதாவது இருப்பின் அது இப்போது தங்களுக்கு சாதகமாக மாறும். கல்லூரிப் படிப்பை முடித்து இருக்கும் மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக தற்போது இருந்து வரும் ஊரிலிருந்து வேறொரு ஊருக்கு மாற வேண்டி இருக்கும். பெண்களுக்கு பொறுமை மிகவும் அவசியம். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் பெண்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். மாமியார் மருமகள் உறவு பிரச்சினையின்றி இருக்கும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.


பரிகாரம்: சிவபெருமானை தினமும் வலம் வரவும். கோளறு பதிகம் படியுங்கள்.
****************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் aகணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x