Published : 03 Jan 2022 07:24 PM
Last Updated : 03 Jan 2022 07:24 PM

2022 எப்படி இருக்கும்?  மூலம் நட்சத்திர அன்பர்களே! மனதில் உறுதி; வீண் செலவு; வாகனச் செலவு; பொறுப்புகள் கூடும்! 

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


மூலம்:


கேதுவை நட்சத்திரநாதனாகக் கொண்ட மூலம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!


இந்த ஆண்டு மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும். வீண் செலவு உண்டாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். லாபம் குறையக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது.

குடும்ப நிம்மதி குறையக்கூடும். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான நிலை ஏற்படும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு பணவரத்து கூடும். மாணவர்கள் கவனத் தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களைப் படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும்.

பொதுவாக இந்த ஆண்டு உங்களுக்கு அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்க எல்லா பிரச்சினைகளும் தீரும். குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

மதிப்பெண்கள்: 75% நல்லபலன்களை எதிர்பார்க்கலாம்.

************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x