Published : 31 Dec 2021 02:32 PM
Last Updated : 31 Dec 2021 02:32 PM

2022  எப்படி இருக்கும்? பொது பலன்கள்! 

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


நிகழும் மங்கலகரமான ஸ்வஸ்திஸ்ரீ பிலவ வருஷம் - தக்ஷிணாயம் - ஹேமந்த ரிது - மார்கழி மாதம் 16ம் நாள் பின்னிரவு 17ம் நாள் முன்னிரவு அன்றைய தினம் தினசுத்தி அறிவது கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி - வெள்ளிக்கிழமை பின்னிரவு சனிக்கிழமை முன்னிரவு - கேட்டை நக்ஷத்ரம் - சித்தயோகம் - கன்னியா லக்னம் - வ்ருச்சிக சந்திரா லக்னம் - ரிஷப நவாம்சமும் - கும்ப சந்திர நவாம்சமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நள்ளிரவு 12.00 மணிக்கு 2022ம் ஆண்டு பிறக்கிறது.

ராசிநிலை - பாதசார விபரம்:
லக்னம் - ஹஸ்தம் 2ம் பாதம் - சந்திரன் சாரம்
சூரியன் - பூராடம் 1ம் பாதம் - சுக்கிரன் சாரம்
சந்திரன் - கேட்டை 2ம் பாதம் - புதன் சாரம்
செவ்வாய் - கேட்டை 2ம் பாதம் - புதன் சாரம்
புதன் - உத்திராடம் 2ம் பாதம் - சூர்யன் சாரம்
குரு - சதயம் 1ம் பாதம் - ராகு சாரம்
சுக்கிரன்(வ) - உத்திராடம் 3ம் பாதம் - புதன் சாரம்
சனி - திருவோணம் 1ம் பாதம் - சந்திரன் சாரம்
ராகு - க்ருத்திகை 3ம் பாதம் - சூர்யன் சாரம்
கேது - அனுஷம் 1ம் பாதம் - சனி சாரம்


சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற எண்: 2022:


இந்த வருடத்தின் கூட்டு எண்: 2 + 0 + 2 + 2 = 6. ஆறு என்பது சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற எண். மஹாவிஷ்ணுவிற்கும் மஹாலக்ஷ்மிக்கும் உகந்த எண் ஆறாகும். ஆண்டு பிறக்கும் நேரத்தில் லக்னாதிபதி புதன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மிகப் பெரிய கூட்டணியுடன் அமர்ந்திருக்கிறார். லக்னாதிபதி புதன் ஐந்தாமிடத்தில் சூர்யன் சாரம் பெற்றிருக்கிறார். லக்ன தொழில் அதிபதி புதன் - குடும்பாதிபதி பாக்கியாதிபதி சுக்கிரன் - பஞ்சம ரண ருணாதிபதி சனி ஆகியோர் சேர்க்கை பெற்றிருக்கிறார்கள். குருவின் சஞ்சாரத்தால் கன்னியர்களுக்கு தகுந்த மணமாகும். மாலை வாய்ப்புகளும் - மழலை பாக்கியமும் - வேலைவாய்ப்புகளும் வியக்கும் விதத்தில் இருக்கும். பத்திரிகைத்துறை - எழுத்துத்துறை - ஆசிரியர் துறை - கணிதம் - ரசாயனம் - ஆன்மிகம் - சோதிடம் - வழக்கறிஞர் துறை - புத்தகத்துறை போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சுக்கிரன் தனது சஞ்சாரத்தை யோக ஸ்தானத்தில் இருப்பதால் கலைத்துறை செழிக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் கலைஞர்கள் கௌரவப்படுத்தப்படுவர். வண்ணத்திரை, சின்னத்திரை இரண்டுமே மக்களுக்கு பயனளிக்கும்.

உணவிற்கு எந்த விதமான பங்கமும் இருக்காது. உணவு உற்பத்தியாளர்களுக்கு தகுந்த விலை நிர்ணயமாகும். மக்களுக்கு பொருளாதார நிலை உயரும். பெட்ரோல் - டீசல் - கச்சா எண்ணெய் - சமையல் எண்ணெய் விலை அதிகமாக உயரும். புத்தாண்டு பிறக்கும்போது உள்ள புதனின் இருப்பால் இந்திய ரூபாயின் மதிப்பில் சலனம் இருக்கும். தங்கம் - வெள்ளி விலையும் உயரும். நிறைய சிவாலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். அரசாங்கத்தில் சிறு சிறு ஊசல்கள் இருக்கும். மழைப் பொழிவு நன்றாக இருக்கும்.

சராசரி வெயில் அளவை விட இந்த வருடம் வெப்பம் அதிகரிக்கும். அண்டார்டிகா - அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் - சுமத்ரா தீவு - ஜப்பான் போன்ற இடங்களில் பூகம்பம் வர வாய்ப்புள்ளது. யாராலும் சரியான முறையில் வானிலையை கணித்துக் கூற முடியாத நிலை ஏற்படலாம். அணு ஆயுதத்தால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். தண்ணீர் தேவை அதிகமாகும். காடுகளை அழிப்பது அதிகமாகும். கடவுளுக்கு எதிராகப் பேசும் நபர்கள் அதிகமாவார்கள்.
***********************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x