Published : 13 Nov 2021 11:21 AM
Last Updated : 13 Nov 2021 11:21 AM

குருப்பெயர்ச்சி பலன்கள் ; கேட்டை நட்சத்திர அன்பர்களே!  தொழிலில் நஷ்டமில்லை; வேலைப்பளு; இல்லத்தில் நிம்மதி; முயற்சிகள் கைகூடும்! 

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கேட்டை:

கிரகநிலை:

குரு பகவான் உங்களின் ஆறாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

எதிர்ப்புகளை எதிர்த்து வீர நடை போடும் கேட்டை நட்சத்திர அன்பர்களே!

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு எல்லாவித வளங்களையும் பெற குருபகவான் அருள் செய்கிறார். வாழ்வில் முக்கியமான கட்டங்களை தெரிந்து கொள்வீர்கள். குடும்பத்திலிருப்பவர்கள் அனைவரும் உங்கள்பேச்சுக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது அதற்கான பாக்கியம் கிட்டும். வாழ்வில் அவரவர் வயதிற்கு ஏற்ப நன்மைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபம் இல்லை என்றாலும் நஷ்டமும் இருக்காது. நம்பிக்கையானவர்களை உடன் வைத்துக் கொள்வது உங்களையும் உங்கள் தொழிலையும் காப்பாற்றும். ஏற்றுமதி – இறக்குமதி தொழில் சிறப்பாக நடைபெறும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைப்பதற்காக அதிகமான வேலைப்பளுவை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வீர்கள்.

பெண்களில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். தந்தையாரின் அன்பு அதிகரிக்கும். மாமியார் – மருமகள் அன்பு பாசம் அதிகரிக்கும்.

மாணவர்கள் நண்பர்களுடன் வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. நல்ல மதிப்பெண் பெறுவதற்கு ஆசிரியர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

அரசியல்துறையினர் கட்சிப் பணிகளில் புதிய முயற்சிகள் கை கூடும். இதனால் மக்களின் நம்பிக்கையைப் பெறுவிர்கள்.

கலைத்துறையினருக்கு தந்தை வழியாக வாய்ப்புகள் வந்து குவியும். புதிய படத் தயாரிப்பாளர்கள் தயாரிப்புகளில் ஈடுபட்டு நல்ல லாபத்தைப் பெறலாம்.

பரிகாரம்:

மஹாவிஷ்ணு ஆராதனையால் தடைகள் அகலும்.

மதிப்பெண்கள்: 69% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

**********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x