குருப்பெயர்ச்சி பலன்கள் ; சுவாதி நட்சத்திர அன்பர்களே! வீண் கவலை; பண வரவு;மதிப்பு கூடும்; நட்பில் பிரச்சினை!  

குருப்பெயர்ச்சி பலன்கள் ; சுவாதி நட்சத்திர அன்பர்களே! வீண் கவலை; பண வரவு;மதிப்பு கூடும்; நட்பில் பிரச்சினை!  
Updated on
1 min read

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


சுவாதி:


கிரகநிலை:
குரு பகவான் உங்களின் ஒன்பதாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.


பலன்கள்:


குடும்ப சிந்தனையுடனே உழைக்கும் சுவாதி நட்சத்திர அன்பர்களே!


இந்த குருப்பெயர்ச்சியானது உங்களுக்கு பலவிதமான லாபத்தையும் அள்ளித்தரப் போகிறது. அதற்கு உங்கள் முயற்சியை மேலும் இரட்டிப்பாக்குங்கள். குருபகவான் உங்களுக்கு நன்மையை அளிப்பார். குடும்பத்தில் தூர தேசத்திலிருந்து வரும் செய்திகளால் மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படும். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தினால் சிறு உடல் உபாதைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளின் வளர்ச்சி பற்றி அவ்வப்போது கவலை வந்து போகும். கணவன் – மனைவி அன்பு அதிகரிக்கும்.
தொழில் செய்து கொண்டிருந்தவர்களுக்கும், புதிதாக தொழில் தொடங்குவதற்கும் பண உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களுக்கு வர வேண்டிய பணமும் வந்து சேரும். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்.


உத்தியோகஸ்தர்கள் பண விஷயத்தைப் பொறுத்த வரை கவலை வேண்டாம். அலுவலகத்தில் உங்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும். உங்கள் சேமிப்பும் அதிகரிக்கும்.


பெண்கள் குடும்பத்தில் இருந்த பணப்பிரச்சினைகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் உங்களைப் புரிந்து நடந்து கொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
மாணவர்கள் சில நுணுக்கமான பாடங்களை எளிய முறையில் பயில வாய்ப்பு கிடைக்கும். உங்களின் அறிவுத்திறன் பளிச்சிடும்.


அரசியல்துறையினர் மக்களுக்குத் தேவையானவற்றில் பணத்தை செலவழிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் மிகுந்து காணப்படும்.


கலைத்துறையினருக்கு பணமுடை நீங்குவதற்கு வாய்ப்புள்ளது. சக கலைஞர்களின் நட்பு வகையில் பிரச்சினைகள் வரலாம்.


பரிகாரம்:


துர்கை வழிபாடு வாக்குவன்மையை கொடுக்கும்.


மதிப்பெண்கள்: 68% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
**********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in