குருப்பெயர்ச்சி பலன்கள் ; சித்திரை நட்சத்திர அன்பர்களே! தடைகள் அகலும்; வேலையில் கவனம்; லாபம் உண்டு; மனதில் நிம்மதி! 

குருப்பெயர்ச்சி பலன்கள் ; சித்திரை நட்சத்திர அன்பர்களே! தடைகள் அகலும்; வேலையில் கவனம்; லாபம் உண்டு; மனதில் நிம்மதி! 
Updated on
1 min read

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


சித்திரை:


கிரகநிலை:


குரு பகவான் உங்களின் பத்தாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.


பலன்கள் :


எதையும் வேகமாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சித்திரை நட்சத்திர அன்பர்களே!


இந்த குருப் பெயர்ச்சியானது தொழிலில் ஏற்பட்ட தடங்கல்களை தகர்க்க அடிகோலாக அமையும். சில சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராகுங்கள். குடும்பத்தில் உங்கள் வாழ்க்கைத்துணை உங்களைப் புரிந்து நடந்து கொள்வார். தாய் மற்றும் தாய்வழி உறவினர்களிடையே இருந்த பிரச்சினைகள் அகலும். வீடு, வாகனம் வாங்கும்போது குடும்பத்தாருடன் ஆலோசித்து பின்பு முடிவெடுக்கவும்.. குடும்பத்துடன் சேர்ந்து சில ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.


தொழிலைப் பெருக்குவதற்கான நிதி வசதிகள் நிதி நிறுவனங்களிடமிருந்து கிடைக்கப் பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான ஆர்வம் அதிகரிக்கும். லாபம் பெறுவதில் இருந்த தடங்கல்கள் மறைந்து நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.


உத்தியோகஸ்தர்கள் நீங்களே முன் சென்று என்னால் செய்ய முடியும் என்று உறுதி கொடுக்காதீர்கள். உங்களுக்கென்று கொடுக்கும் வேலையைச் சரியாகச் செய்தாலே நலம்.


பெண்களில் தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலில் சிறந்து விளங்குவார்கள். உடல் நலனில் முன்னேற்றம் இருக்கும். நிம்மதியான தூக்கம் இருக்கும்.
மாணவர்களுக்கு டெக்னிகல் துறையில் பயில்பவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். உங்கள் படிப்பிற்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும்.
அரசியல்துறையினருக்கு உங்களைச் சுற்றி உள்ளவர்களால் உங்களுக்கு ஏற்பட்ட மனவருத்தங்கள் மாறும்.


கலைத்துறையினர் நீண்ட நாட்களாக நீங்கள் விரும்பிய ஒருவரது பாராட்டைப் பெறுவீர்கள்.உங்களை ஊக்குவிக்கும் வகையில் அது அமைந்திருக்கும்.


பரிகாரம்:


வாராஹி தேவியை வணங்கினால் உடல்நலம் சீராகும்.


மதிப்பெண்கள்: 67% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.


**********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in