Published : 08 Oct 2021 14:59 pm

Updated : 08 Oct 2021 14:59 pm

 

Published : 08 Oct 2021 02:59 PM
Last Updated : 08 Oct 2021 02:59 PM

கடக ராசி அன்பர்களே! அக்டோபர் மாத பலன்கள்; பாராட்டு கிடைக்கும்; மதிப்பு கூடும்; எதிர்பார்த்த பண வரவு; பதவி உயர்வு! 

kadaga-rasi-october-palangal

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)


கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் புதன்(வ), செவ்வாய், சூர்யன் - சுக ஸ்தானத்தில் சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி, குரு (வ) - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.
3ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை அன்று சுக்கிர பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
4ம் தேதி புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
14ம் தேதி குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
18ம் தேதி சூர்ய பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23ம் தேதி செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
30ம் தேதி புதபகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
31ம் தேதி சுக்கிர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.

இந்த மாதம் வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள்.

சிலருக்கு உங்கள் செல்வாக்கைக் கண்டு பொறாமை உண்டாகலாம். கவனம் தேவை. எதிர்ப்புகள் விலகும். காரியத் தடைகள் நீங்கும்.
தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் வேகம் பிடிக்கும். வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேலைப் பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிப்பார்கள். பணவரத்து திருப்தி தரும்.

குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளால் பெருமை சேரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

பெண்களுக்கு காரிய தடைகள் நீங்கி எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும்.
மாணவர்களுக்கு படிக்காமல் விட்ட பாடங்களைப் படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற பாடுபடுவீர்கள்.

புனர்பூசம் 4ம் பாதம்:
இந்த மாதம் வெளியில் தங்கும் சூழல் ஏற்படும். எடுத்த காரியத்தைச் செய்யும்போது எது சரி, எது தவறு என்று தடுமாற்றம் ஏற்பட்டாலும் திறமையால் அதனை செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும். நிதி உதவி கிடைக்கும். வாடிக்கையாளர் மத்தியில் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சம்பள உயர்வும் வரலாம்.


பூசம்:
இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். பெண்களுக்கு மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைப்பதும் நன்மை தரும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும்.


ஆயில்யம்:
இந்த மாதம் நிலுவையில் உள்ள காரியங்கள் சிறப்பாக முடிய வழி பிறக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகள் மக்கள் தொடர்பான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.


பரிகாரம்: அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று தரிசித்து அர்ச்சனை செய்து வழிபட மனக்குழப்பம் நீங்கும். எதிலும் வெற்றி உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: 16, 17
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; தேய்பிறை: புதன், வியாழன்
***************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!

கடக ராசி அன்பர்களே! அக்டோபர் மாத பலன்கள்; பாராட்டு கிடைக்கும்; மதிப்பு கூடும்; எதிர்பார்த்த பண வரவு; பதவி உயர்வு!கடகம்கடக ராசிபலன்கள்மாத பலன்கள்மாத ராசிபலன்கள்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்ஜோதிடம்KadagamPalangalMonthly palangalJodhidamKadaga rasipalangalOctober palangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x