Published : 02 Sep 2021 04:39 PM
Last Updated : 02 Sep 2021 04:39 PM

பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள்; செப்டம்பர் 5ம் தேதி வரை

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

பூரட்டாதி -

நன்மைகள் அதிகமாக நடைபெறும் வாரம். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.

அதேசமயம் செலவுகளும் எதிர்பாராத விதமாக இருக்கும். சிக்கன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்தியாவசிய செலவுகளை தவிர அநாவசிய செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். சிறிய அளவிலான மருத்துவச் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.

நண்பர்களாால் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தினர் பக்கபலமாக இருப்பார்கள். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து தரக்கூடிய அளவிலேயே இருக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடக்கும்.

பணியிடத்தில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். திருமண முயற்சிகள் கைகூடும்.

புதிய நட்பு எதையும் ஏற்க வேண்டாம். அவர்கள் மூலமாக சில பிரச்சினைகளை சந்திக்க வேண்டியது வரும். சகோதர வழியில் இருந்த வருத்தங்கள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.

கலைஞர்களுக்கு பெண் நண்பர்கள் மூலமாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும்.

செவ்வாய் -
வருமானம் இருமடங்காகும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றியைத் தரும். முயற்சி எடுக்காத விஷயங்கள் கூட இப்பொழுது தானாக முடியும். நீண்ட நாளாக பேசி வந்த ஒரு பிரச்சினை இன்று பேசி முடிவு எடுக்கப்படும்.

புதன் -
அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையில்லாத விஷயத்திற்காக நீங்கள் செலவு செய்ய வேண்டியது வரும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். பணியிடத்தில் அதிக கவனத்தோடு பணியாற்றவேண்டும். வியாபார விஷயங்களில் நிதானப் போக்கை கடைபிடிப்பது நல்லது.

வியாழன் -
வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். எதிர்பாராத வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். தாய்வழி உறவுகளால் உதவிகள் கிடைக்கும். இல்லத்தில் சுப விசேஷங்களுக்கான பேச்சுவார்த்தைகள் நடக்கும்.

வெள்ளி -
அலுவலகத்தில் சக ஊழியரின் வேலையைச் செய்ய வேண்டியது வரும். செலவுகளும் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும். குறிப்பாக குழந்தைகளின் மருத்துவச் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் குறைவாகவே இருக்கும்.

சனி-
தன வரவு திருப்திகரமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். தாமதப்பட்ட வேலைகள் அனைத்தும் இன்று செய்து முடிப்பீர்கள். குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள்.

ஞாயிறு -
அலைச்சல்கள் அதிகமாகும், ஏமாற்றங்களையும் சந்திக்க வேண்டியது வரும். எதிலும் அவசரம் காட்ட வேண்டாம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தோடு நேரத்தை செலவிடுங்கள். குழந்தைகளோடு விளையாடி மகிழுங்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ துர்கை அம்மன் வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்..
**************

உத்திரட்டாதி -

அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும். எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக தீரும். தாய்வழி உறவினர்கள், தாய்மாமன் போன்றவர்களிடம் ஏற்பட்ட மனவருத்தங்கள் அகலும். மீண்டும் சுமுகமான உறவு தொடரும்.

பயணங்களால் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்காது. ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சியும், லாபமும் காண்பார்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள்.

வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவார்கள். தங்கள் வியாபார நிறுவனத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.

பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் இருந்த பின்னடைவுகள் நீங்கி, ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். குழந்தைகளைப் பற்றிய கவலை நீங்கும்.

திரைத்துறை கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

இந்த வாரம் -

திங்கள் -
பயணங்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். ஒரு சில நல்ல முடிவுகளை எடுத்து அதை செயல்படுத்துவீர்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அலுவலகப் பணிகளில் திருப்திகரமான நிலை இருக்கும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

செவ்வாய் -
திட்டமிட்ட காரியங்களும் நடைபெறும், திட்டமிடாத காரியங்களும் இன்று வெற்றிகரமாக முடியும். ஆதாயம் பெருகும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும்.

புதன் -
எடுத்துக் கொண்ட அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.வியாபார பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறும்.குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

வியாழன் -
செலவுகள் அதிகமாக இருக்கும். வீட்டு பராமரிப்புச் செலவுகள், வாகனப் பராமரிப்புச் செலவுகள் என செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாது. சிக்கனம் தேவை.

வெள்ளி-
பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாக இருக்கும். தொழிலுக்காக எடுத்துக் கொள்ளும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்ப்புக் காட்டியவர்கள் உங்களிடம் பணிந்து போவார்கள்.l

சனி-
அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். நிதானம் தேவை. வாழ்க்கைத்துணையிடமும், குழந்தைகளிடமும் கோபத்தைக் காட்டவேண்டாம். பொறுமை மிக மிக அவசியம்.

ஞாயிறு -
எதிர்பார்த்த பணம் கிடைக்கும். ஆதாயம் தரும் ஒப்பந்தம் ஒன்று நிறைவேறும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். நண்பர்களாலும் உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட ஆலோசனை செய்வீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ ஆறுமுகப் பெருமானை வணங்குங்கள். கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
**********

ரேவதி -

எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் வெகுவாக குறையும். குடும்பத்தினர் தொடர்பான விஷயங்கள் மன நிறைவைத் தரக் கூடியதாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் உறுதியாகும்.

உத்தியோகத்தில் இயல்பான நிலையே தொடரும். ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத அளவுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் முதலீடுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

இதுவரை தொழிலில் இருந்த மந்த நிலை மாறி இயல்பு நிலைக்கு படிப்படியாக வருவீர்கள். ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். அரசு வழியில் இருந்த பிரச்சினைகள் அகலும்.

ஆதாயம் தரக்கூடிய உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும். எந்த வாய்ப்பையும் தவற விடவேண்டாம். சிறிய அளவிலான வியாபாரமாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள். அதிக லாபம் கிடைப்பது உறுதி.

பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும்.

கலைஞர்களுக்கு சற்றும் எதிர்பாராத இடத்திலிருந்து அழைப்பு கிடைக்கப்பெற்று ஒப்பந்தங்கள் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். பயணங்களால் லாபம் உண்டு. எடுத்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். சகோதரருக்காக ஒரு சில உதவிகளும் செலவுகளும் செய்ய வேண்டியது வரும்.

செவ்வாய் -
வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியப் பிரச்சினைகள் தீரும். எதிர்பார்த்த நன்மைகள் அதிகமாக நடைபெறும். அலுவலகத்தில் இயல்பான நிலை தொடர்ந்தாலும், ஒரு சிலருக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும்.

புதன் -
அலைச்சல் அதிகமாக இருக்கும். தேவையில்லாத சர்ச்சையில் ஈடுபட வேண்டாம். அடுத்தவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

வியாழன் -
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இப்பொழுது வசூலாகும். திருமண முயற்சிகள் முடிவாகும். குடும்பத்தில் சுப விசேஷங்களுக்கான வாய்ப்பு ஏற்படும்.

வெள்ளி -
கோபத்தை குறைத்துக்கொள்ளவேண்டும். நிதானத்தை இழக்கக்கூடாது. அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். கையாளும் பொருட்களில் கவனம் இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

சனி-
தொழில் தொடர்பான ஒரு சில பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருவீர்கள். ஆதாயம் ஏற்படும் ஒரு வியாபார ஒப்பந்தம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். சிறு தூரப் பயணங்கள் ஏற்படும்.

ஞாயிறு -
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும், வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். நண்பர்கள் தேவையான உதவி செய்வார்கள். தொழில் மற்றும் வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வரும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீலட்சுமி நரசிம்மர் வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் நடக்கும்.
****************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x